ஜெர்மனியில் ஸ்டைலாக அமைச்சர் ராமச்சந்திரன்! தமிழ்நாட்டை சுற்றி பார்க்க வருமாறு அழைப்பு!

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோட் சூட் கெட் அப்பில் ஜெர்மனி சுற்றுப்பயணம்.

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: அரசு முறை பயணமாக அதிகாரிகளுடன் ஜெர்மன், செக் குடியரசு நாடுகளுக்கு சென்றுள்ள அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டை சுற்றி பார்க்க வருமாறு அந்நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து உள்ளூர் செய்தி நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

ஜெர்மனில் ராமச்சந்திரன்

ஜெர்மனில் ராமச்சந்திரன்

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TRAVEL BOURSE-2023) தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், பார்வையாளர்களிடம் தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகள் குறித்த புத்தகங்கள், மடிப்பேடுகளை வழங்கி தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ள அழைப்பு விடுத்து கவனம் ஈர்த்தார்.

தமிழக சுற்றுலாத்துறை

தமிழக சுற்றுலாத்துறை

இந்நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறைக்கும், இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருது அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.

செக் குடியரசு நாடு

செக் குடியரசு நாடு

தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் செக் குடியரசு நாட்டிற்கும் சென்றனர். அங்கு அந்நாட்டின் மண்டல மேம்பாட்டு துணை அமைச்சர், ஜான் ஃப்ளூக்சாவை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து தெரிவித்ததுடன், அவற்றை உள்ளூர் செய்தி நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

அரசு முறை பயணம்

அரசு முறை பயணம்

இந்த சந்திப்பின் போது செக்குடியரசின் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தமிழ்நாட்டின் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் பயணத்திட்டங்கள், ஓட்டல் தமிழ்நாடு விடுதிகள் பயன்பாட்டில் வணிகரீதியாக இணைந்து செயல்படுதல், சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப சுற்றுலா திட்டங்களை வகுப்பது, விழாக்கள் மற்றும் சுற்றுலா பொருட்காட்சிகளில் கலந்து கொள்வது குறித்தும் கலந்துரையாடினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+