எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை! பொறுத்துக்கொள்ள முடியாமல் பேசுகிறார்! தங்கம் தென்னரசு சுடச்சுட பதிலடி!
துபாய்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுக அரசுக்கும் உலகம் முழுவதும் கிடைக்கும் புகழை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ள நிலையில், அதற்கு துபாயிலிருந்து சில மணி நேரங்களில் சுடச்சுட பதிலடி கொடுத்திருக்கிறார் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
இதன் மூலம் துபாயில் இருந்தாலும் தமிழக நடப்புகளை முதல்வரும், தாமும் உடனுக்குடன் அறிந்து வருவதை அவர் உணர்த்தியுள்ளார்.

தங்கம் தென்னரசு
அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் சென்றிருக்கிறார். இந்நிலையில் துபாயிலிருந்தவாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். அதில், துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சிக்கு அது தொடங்கப்பட்ட போது இருந்த வரவேற்பை விட முடிவடையவுள்ள இறுதிவாரமான இந்த வாரத்தில் தான் அதிக வரவேற்பு இருப்பதாகவும் இப்போது தான் உலகம் முழுவதும் இருந்தும் முதலீட்டாளர்கள் அந்தக் கண்காட்சிக்கு வருகை தருவது அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

துபாய் எக்ஸ்போ
இதனால் தான் இந்த தருணத்தில் துபாய் எக்ஸ்போவில் தமிழக அரங்கம் திறக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி அவர் வெளிநாடு சென்ற போது எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய அவர், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் மூலம் 6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் வெளியிட்டார்.

பொறுக்க முடியவில்லை
அதேபோல் விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கை பொறுத்தவரை 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் வேகமாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள புகழை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

சுடச்சுட பதிலடி
முதலமைச்சர் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டியளித்த அடுத்த சில மணி நேரங்களில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயிலிருந்து சுடச்சுட காணொலி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் என்னதான் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தாலும் கூட, தமிழக நடப்பு விவரங்களை தொடர்ந்து முதல்வரும், தாமும் கண்காணித்து வருவதை அந்த வீடியோ பதிவு மூலம் உணர்த்தியிருக்கிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications