Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லெஸ்பியன் உறவு.. அழகிகள் 2 பேர் மோதிரம் மாற்றி திருமணம்.. ஆசையோடு சுற்றிய 2 நாட்டு ஆண்களும் அவுட்

Subscribe to Oneindia Tamil

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா நாட்டின் அழகியையும், பியூர்டோ ரிகோ நாட்டு அழகியையும் திருமணம் செய்து இருநாட்டு ஆண்களும் சுற்றி வந்தனர். இந்நிலையில் தான் இருநாட்டு ஆண்களுக்கும் விபூதி அடித்த அழகிகள் இருவரும் லெஸ்பியன் ஜோடியாக மாறி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்-பெண் திருமணம் செய்வது போல் ஓரினச்சேர்க்கையாளர்களும் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

நண்பர்களாக இருக்கும் இரு ஆண்கள் அல்லது தோழிகளாக இருக்கும் இரு பெண்கள் திருமணம் செய்து கொள்வது சில நாட்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இரு அழகிகள் திருமணம்

இரு அழகிகள் திருமணம்

இந்நிலையில் நான் இருநாடுகளை சேர்ந்த அழகிகள் லெஸ்பியன் ஜோடியாக மாறி நீண்டகாலமாக ரகசிய உறவில் இருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அவர்கள் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? என்பது பற்றிய முழுவிபரங்கள் வருமாறு:

இருநாட்டு அழகிகள்

இருநாட்டு அழகிகள்

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் மரியானா வரலோ. இவர் அந்நாட்டின் அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் அர்ஜென்டினா பட்டத்தை பெற்றார். அர்ஜென்டினாவில் அழகியான இவர் பிற நாடுகளில் நடக்கும் அழகி போட்டிகளில் பங்கேற்று வந்தார். இதேபோல் தான் பியூர்டோ ரிகோ நாட்டை சேர்ந்தவர் பாபியோலா வாலண்ட். மிஸ் பியூர்டோரிகோ பட்டம் வென்ற இவர் உலகில் பல இடங்களில் நடக்கும் அழகி போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

இந்நிலையில் தான் இவர்கள் 2 பேரும் மிஸ் கிராண்ட் சர்வதேச 2020 எனும் அழகு போட்டியில் சந்தித்து கொண்டானர். போட்டியாளர்களாக இருவரும் பேசிய நிலையில் தான் இருவருக்கும் இடையே இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அர்ஜென்டினா அழகி மரியானா வரேலாவும், போர்ட்டோ ரிகோ அழகி பேபியோலா வாலண்டினும் தோழியாக மாறினார்கள்.

லெஸ்பியன் உறவு

லெஸ்பியன் உறவு

இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே அதீத அன்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் அதிகமாக விரும்ப தொடங்கி நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் லெஸ்பியன் ஜோடியாக மாறி ஒன்றாக வசிக்க தொடங்கினர். தங்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவு பற்றி இருவரும் வாய்திறக்காமல் ரகசியம் காத்து வந்தனர்.

வீடியோ வெளியீடு

இந்நிலையில் தான் இருவரும் தற்போது தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும், இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் லெஸ்பியன் ஜோடியாக உள்ள இரு அழகிகளும் திருமணம் செய்து கொண்டதை வெளியுலகிற்கு தெரிவித்துள்ளனர்.

 திருமணம் நடந்தது எப்படி?

திருமணம் நடந்தது எப்படி?

இவர்கள் இருவரும் கடந்த மாதம் 28 ம் தேதி திருமணம் செய்துள்ளனர். 2 ஆண்டு ரகசிய உறவுக்கு பிறகு இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். போர்டோ ரிகோவின் சான் ஜூவானில் உள்ள திருமணப் பதிவு அலுவலகத்தில் முறைப்படி திருமணத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் திருமண உடை என்பதை குறிக்கும் வகையில் இருவரும் வெள்ளை நிற உடையணிந்த போட்டோக்கள் எடுத்தும் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.

 இருநாட்டு ஆண்களும் அவுட்

இருநாட்டு ஆண்களும் அவுட்

அர்ஜென்டினா அழகி மரியானா வரலோ, பியூர்டோ ரிகோ நாட்டை சேர்ந்த அழகியான பாபியோலா வாலண்ட் ஆகியோரை திருமணம் செய்த இருநாட்டு ஆண்களும் சுற்றி வந்த நிலையில் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளதால் சிலர் வீடியோவின் கமெண்ட் பிரிவில் வந்து வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் இருவரும் இருநாட்டு ஆண்களை அவுட் செய்துவிட்டு புதிய வாழ்க்கையை தேர்வு செய்துள்ளனர் என கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+