என்னை எப்படி தடுக்கலாம் நீங்க.. சீனா மீது பாய்ந்த கனடா அழகி
ஹாங்காங்: மிஸ் கனடா பட்டம் வென்றவரான அனஸ்தஸியாவை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள சன்யா என்ற தீவுக்குள் நுழைய சீன அரசு தடை விதித்துள்ளது. இதனால் சீன அரசைக் கடுமையாக கண்டித்துள்ளார் அனஸ்தஸியா.
சீனாவில் பிறந்தவர் தான் இந்த அனஸ்தஸியா. இவரது முவுப் பெயர் அனஸ்தியா லின். 25 வயதான இவர் நடிகையும் ஆவார். கடந்த மே மாதம் மிஸ் கனடா பட்டம் வென்றார்.
சன்யா என்ற நகரில் மிஸ் வேர்ல்ட் போட்டி நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளவுள்ளார் அனஸ்தஸியா. அதற்குத்தான் சீனா தடை போட்டு விட்டது.

நியாயமற்றது...
இதுகுறித்து ஹாங்காங்கில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சீன அரசின் தடை நியாயமற்றது, அர்த்தமற்றது என்று சாடியுள்ளார்.

தடை...
மேலும், தான் ஹாங்காங்கிலிருந்து சன்யா செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தான் மனித உரிமை ஆர்வலராகவும் இருப்பதால்தான் இப்படி சீனா நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் அனஸ்தஸியா.

அடக்குமுறை...
அதோடு, தனது நாட்டு மக்களை சீனா அடக்கி வைத்திருப்பதையே இது காட்டுகிறது. துணிச்சலுடன் யாரும் பேசக் கூட முடியாத நிலையை அது ஏற்படுத்தி வருகிறது. என்னை சன்யாவுக்குச் செல்ல விடாமல் தடுப்பதும் கூட இந்த அடக்குமுறையைத் தான் காட்டுகிறது.

கோபம்...
என் மீது சீன அரசு கோபமாக இருப்பதாக உணர்கிறேன். காரணம் எனது பல்வேறு செயல்பாடுகள் இங்கு நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் அம்பல்படுத்தியதால்தான்.

போராடுவேன்...
ஆனால் நான் விட்டுத் தர மாட்டேன். போராடுவேன். என்னால் முடிந்தவரை போராடுவேன். தொடர்ந்து போராடுவேன் என்றார் அவர்.

படங்களில் விமர்சனம்...
சீனாவில் நிலவும் ஊழல், மத கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை விமர்சிக்கும் படங்களில் அனஸ்தஸியா நடித்துள்ளார். சீனாவில் நிலவம் முனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி...
அனஸ்தஸியாவின் தந்தை சீனாவில்தான் வசிக்கிறார். அவரைக் கூட பலமுறை சீன அரசு நெருக்கடி தந்து அனஸ்தஸியாவைக் கட்டுப்படுத்த முயன்றதாக குற்றச்சாட்டு உண்டு.












Click it and Unblock the Notifications