For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய வம்சாவளி அழகி மிஸ் அமெரிக்காவாக தேர்வு

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் நியூயார்க் அழகி நினா தவுலுரி, மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி இவர்தான். மேலும் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 2வது ஆண்டாக நியூயார்க் அழகி வென்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்தார் நினா.

24 வயசு

24 வயசு

நினாவுக்கு 24 வயதாகிறது. அட்லான்டிக் சிட்டியில் நடந்த போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார் நினா.

பாலிவுட் டான்ஸ் ஆடி கலக்கல்

பாலிவுட் டான்ஸ் ஆடி கலக்கல்

டேலன்ட் பிரிவு போட்டியின்போது நினா பாலிவுட் ஸ்டைலில் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடி கலக்கி விட்டார்.

53 போட்டியாளர்கள்

53 போட்டியாளர்கள்

மொத்தம் 53 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் நினாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

2வது நியூயார்க் அழகி

2வது நியூயார்க் அழகி

நியூயார்க்கைச் சேர்ந்த மலோரி ஹேகன் கடந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றிருந்தார். இப்போது இந்த முறையும் நியூயார்க்குக்கே பட்டம் போயுள்ளது.

முதல் இந்தியப் பெண்

முதல் இந்தியப் பெண்

மிஸ் அமெரிக்கா அழகிப் பட்டத்தை இதுவரை இந்திய அழகி யாருமே வென்றதில்லை. இப்போதுதான் முதல் முறையாக இந்த சாதனையப் படைத்துள்ளார் நினா.

வாழ்த்துகள் நினா...!

சீமாந்திரா பொண்ணு...

சீமாந்திரா பொண்ணு...

நினா, அடிப்படையில் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். அதாவது சீமாந்திராவைச் சேர்ந்தவர்.

அரை இறுதி வரை வந்த தெலுங்கானா பிந்து

அரை இறுதி வரை வந்த தெலுங்கானா பிந்து

அரை இறுதிக்குத் தேர்வான 15 அழகிகளில் இன்னொரு ஆந்திர அழகியான பாமர்த்தி பிந்துவும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். அதாவது ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார்.

English summary
Nina Davuluri became the first contestant of Indian heritage and the second consecutive contestant from New York to win the Miss America pageant Sunday night. Davuluri, 24, won the title as the nationally televised pageant returned home to Atlantic City.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X