ஜனவரியில் குண்டுப் பெண்களுக்கான உலக அழகிப் போட்டி
ட்ரினிடாட்: குண்டான பெண்களுக்கான மிஸ் பிளஸ் சைஸ் பிரபஞ்ச அழகிப் போட்டி ட்ரினிடாட் மற்றும் டொபாகோவில் வரும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது.
தென்னமெரிக்காவில் உள்ள இரட்டை தீவு நாடான ட்ரினிடாட் மற்றும் டொபாகோவில் வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி மிஸ் பிளஸ் சைஸ் பிரபஞ்ச அழகிப் போட்டி நடக்க உள்ளது. முன்னதாக மிஸ் பிளஸ் கரீபியன் பிரபஞ்ச அழகி என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போட்டி தற்போது உலக அளவில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குண்டான அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அழகு என்பது உடலின் சைஸில் இல்லை என்பதை எடுத்துக் கூறுவது தான் இந்த போட்டியின் குறிக்கோள் ஆகும். வெளி அழகு முக்கியம் அல்ல மன அழகே அழகு என்பதை இந்த போட்டி தெரிவிக்கிறது.
மிஸ் பிளஸ் சைஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் நீச்சல் உடை, பார்ட்டி உடை, கேள்வி பதில் மற்றும் திறமை சோதனை ஆகிய சுற்றுகள் உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 1.89 லட்சம் ரொக்கம், அழகு குறித்து ஓராண்டு படிக்க ஸ்காலர்ஷிப், மாடலாக இருக்க ஒப்பந்தம், கரீபியின் தீவில் தங்களுக்கு பிடித்த இடத்திற்கு செல்ல டிக்கெட் மற்றும் பிற பரிசுகள் அளிக்கப்படும்.
குண்டான அழகிகளுக்கான போட்டி கடந்த 2012ம் ஆண்டு பேர்ல் வில்லியம்ஸ் என்பவரால் துவங்கப்பட்டது. இந்த போட்டி மிகவும் பிரபலமாகி வருகின்றபோதிலும் போதிய ஸ்பான்ஸர்ஸ் இல்லை என்று வில்லியம்ஸ் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications