‛மிஸ் யுனிவர்ஸ் 2023’ அழகியாக ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்வு.. மிஸ் செய்த இந்தியாவின் ஸ்வேதா ஷர்தா
சான் சால்வடார்: மிஸ் யுனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய நிலையில் நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றார். இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா ஷர்தா மகுடத்தை மிஸ் செய்தார்.
இந்தியா உள்பட பல நாடுகளில் அழகி போட்டிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு பெரிய நகரங்கள் வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும், நாடுகள் வாரியாகவும் அழகி போட்டிகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் முக்கியமான ஒரு போட்டி தான் மிஸ் யுனிவர்ஸ். இந்த மிஸ் யுனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான போட்டி மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டில் நடந்து வருகிறது. அந்த நாட்டின் தலைநகரான சான் சால்வடாரில் இறுதி போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியை முன்னாள் பிரபஞ்ச அழகி ஒலிவியா கல்போ நடத்துகிறார். சான்சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் இந்த பைனல் போட்டி தொடங்கியது. இதில் மொத்தம் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வெல்ல உள்ளனர். இந்தியா சார்பில் ஒருவர் பங்கேற்றுள்ளார்.

இந்தியா சார்பில் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளவரின் பெயர் ஸ்வேதா ஷர்தா. இவர் சண்டிகரை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 23 வயது ஆகிறது. இவர் மிஸ் திவா யுனிவர்ஸ் 2023 என்ற பட்டத்தை வென்ற நிலையில் மிஸ் யுனிவர்ஸ் 2023 இறுதி போட்டியில் தகுதி பெற்றுள்ளார்.

இவர் சிறுவயது முதலே மாடலிங்கில் ஆர்வமாக இருந்தார். இவர் பல்வேறு ரியாலிட்டி ஷோ, பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதனால் மிஸ் யுனிவர்ஸ் 2023 மகுடத்தை அவர் வெல்வரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மிஸ் யுனிவர்ஸ் 2023 இறுதி போட்டியை மிஸ் யுனிவர்ஸ் யூடியூப் சேனல் மற்றும் மிஸ் யுனிவர்ஸ் எக்ஸ் பக்கத்திலும் நேரடியாக ஒளிரப்பப்பட்டது.

இதில் நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யூனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றுள்ளார். மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்ற ஷெய்னிஸ் பலாசியோஸ் மேடையிலேயே ஆனந்த கண்ணீர் சிந்தினார். டாப் 3 இடத்துக்கு தாய்லாநதை சேர்ந்த போர்ஷில்ட், ஆஸ்திரேலியாவின் மோராயா வில்சன், நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்வாகினர். இதில் ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றார். இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா ஷர்தா டாப் 3க்கு முன்னேறாமல் மகுடத்தை மிஸ் செய்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications