இன்று காலை நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி.. இந்தியா சார்பில் களமிறங்கும் அழகி யார் தெரியுமா
சான் சால்வடார்: உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற உள்ளது.
பேஷன் உலகில் ரொம்பவே முக்கியமான போட்டிகளில் ஒன்று மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியாகும். அதன்படி 72ஆவது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி எல் சால்வடாரில் நடைபெறுகிறது. இந்த அழகி போட்டியில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்தும் 90 அழகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தப் போட்டி எல் சால்வடார் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடைபெறுகிறது. இந்த அரங்கில் சுமார் 13,000 பேர் போட்டியை நேரடியாகக் காண உள்ளனர். இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்தியாவில் மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டியை மிஸ் யுனிவர்ஸ் யூடியூப் சேனலிலும் மிஸ் யுனிவர்ஸ் எக்ஸ் பக்கத்திலும் நேரடியாகப் பார்க்கலாம்.
இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் ஸ்வேதா ஷர்தா கலந்து கொள்கிறார். 23 வயதான ஸ்வேதா ஷர்தா சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர் ஆவார்.
மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ஸ்வேதா ஷர்தாவுக்கு டான்ஸும் நன்றாக வருமாம். தனது கல்லூரி படிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முத்த அவர் டான்ஸ் இந்தியா டான்ஸ், டான்ஸ் தீவானே, டான்ஸ் பிளஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டி பல்வேறு காரணங்களால் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் முதல்முறையாக இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டு திருநங்கைகள், இரண்டு தாய்மார்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும், மிஸ் நேபாளத்தை வென்ற ஜேன் தீபிகா காரெட் பிளஸ் சைஸ் மாடல் ஆவார். அவரும் கூட இந்தப் போட்டியில் களமிறங்குகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications