'மிஸ்எர்த்’ உலக அழகிப் பட்டத்தை வென்றார் வெனிசுலா அழகி

Subscribe to Oneindia Tamil

மணிலா: பிலிப்பைன்சில் நடைபெற்ற மிஸ்.எர்த் 2013 உலக அழகிப்போட்டியில் ‘மிஸ் எர்த் உலக அழகியாக வெனிசுலா அழகி ஆலிஷ் ஹென்ரிச் என்ப்தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லாஸ் பினாஸ் நகரில் உள்ள வெர்சைல்ஸ் அலாபாங்கில் நடந்த 'மிஸ் எர்த் 2013' உலக அழகிப் போட்டி யில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 88 அழகிகள் கலந்து கொண்டனர். பலவித சுற்றுகளாக நடத்தப் பட்ட இப்போட்டியில் நேற்று இறுதிச் சுற்று நடைபெற்றது.

அதில், வெனிசுலாவை சேர்ந்த ஆலிஷ் ஹென்ரிச் என்பவர் மிஸ்எர்த் உலக அழகி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Miss Venezuela, Alyz Henrich, wins Miss Earth 2013

மாடல் அழகி....

மிஸ் எர்த் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 22 வயது ஆலிஷ் ஹென்ரிச், ஒரு மாடல் அழகி ஆவார். இவர் வெனிசுலாவின் பால்கான் மாகாணத்தில் உள்ள லாஸ் தகூள் நகரை சேர்ந்தவர் ஆவார்.

நெருப்பு அழகி...

மேலும் இப்போட்டியில், ‘மிஸ்எர்த்' நெருப்பு அழகி ஆக கொரியாவை சேர்ந்த கத்ரீனாவும், மிஸ்எர்த் நீர் அழகி ஆக தாய்லாந்தை சேர்ந்த புனிகா குல்சூன் டோராட்டும், மிஸ் எர்த் காற்று அழகி ஆக ஆஸ்திரியாவை சேர்ந்த காதியா வாக்னரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலா அழகிகள்....

கடந்த மாதம் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியிலும் வெனிசுலா அழகி காபிரியலா இஸ்லெர் பட்டம் வென்றார். தற்போது அதே நாட்டை சேர்ந்த ஆலிஷ் ஹென்ரிச் மிஸ்எர்த் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டு நடந்த 2 அழகிப் போட்டிகளிலும் வெனிசுலா அழகிகளே பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளனர்.

இந்திய அழகி....

இந்த அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஷோபிதா துலிபாலா, முதல் 16-வது இடத்துக்குகூட வர முடியாமல் தோல்வி அடைந்து வெளியேறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+