கல்யாணத்துக்கு முன்னாடி 'அது' தப்பு... சொல்கிறார் மிஸ் வேர்ல்ட்!
மணிலா திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு, கருத்தடை போன்றவற்றில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றவரான மேகான் லின் யங்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மிஸ் வேர்ல்ட்அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் மேகான் யங்.
பிலிப்பைன்ஸ் தாயாருக்கும், அமெரிக்கத் தந்தைக்கும் பிறந்தவர் மேகான். இவர் தற்போது திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு, கருத்தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்தடை தவறு
நான் உயிர்கள் மீது மதிப்பு வைத்துள்ள பெண். எனவே எனது ஆதரவு எப்போதுமே கருத்தடைக்கு கிடையாது.

விவாகரத்தும் தவறு
அதேபோல விவாகரத்து மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே அதையும் எப்போதும் ஆதரிக்க மாட்டேன்.

திருமணத்திற்கு முந்தைய செக்ஸும் தவறு
அதேபோல திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவையும் நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். எனவே எனக்கு எப்போதும் கருத்தடை சாதனங்கள் தேவைப்படாது என்று கூறுகிறார் மேகான்.

பிரசாரம் செய்வாரா...
கருத்தடை, விவாகரத்து, திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதால், இவற்றுக்கு எதிராக மேகான் உலகம் தழுவிய பிரசாரத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் பிலிப்பைன்ஸ் அழகி
மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்ற முதல் பிலிப்பினோ பெண் என்ற பெருமை மேகானுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications