கடலில் மிதந்த 4 ஆரஞ்சு கலர் பொருட்கள் விமான பாகங்கள் இல்லை: மீன்பிடி சாதனங்கள்
பெர்த்: மலேசிய விமானத்தை தேடுகையில் தெற்கு இந்திய பெருங்கடலில் மிதந்த பொருட்கள் மீன்பிடி சாதனங்கள் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி மாயமான விமானம் என்ன ஆனது என்று தெரியாமல் இரண்டு வாரங்கள் ஓடின. அதையடுத்து விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் விமானம் கடலில் விழுந்து மூழ்கியதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

வானிலை
மலேசிய விமானத்தை தேடும் பணியில் நேற்று 10 விமானங்கள் மற்றும் 10 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் மோசமான வானிலை காரணமாக தேடல் பணி நேற்று துவங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்டது.

ஆரஞ்சு பொருட்கள்
இந்திய பெருங்கடலில் நேற்று முன்தினம் ஆரஞ்சு நிறத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4 பொருட்கள் விமானத்தின் பாகங்கள் இல்லை என்றும், அவை மீன்பிடி சாதனங்கள் என்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

பொருட்கள்
இந்திய பெருங்கடல் பகுதியில் பொருட்கள் மதிந்ததை பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்கள் படம் பிடித்து அனுப்பி வைத்தன. இந்நிலையில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட சில பொருட்களை சோதனை செய்ததில் அவற்றுக்கும் விமானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிய வந்தது.

மலேசிய பிரதமர்
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகருக்கு வரும் 3ம் தேதி சென்று விமான தேடலை நேரில் பார்வையிட திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications