காதலனுடன் உல்லாசம்.. டக்னு வந்த மனைவி.. பதட்டத்தில் 10வது மாடி பால்கனியில் பைப்பில் தொங்கிய காதலி

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சட்டையில்லாத ஒரு நபர், அப்பார்ட்மென்ட் ஒன்றின் 10வது மாடியில் தன்னுடைய காதலியுடன் பேசிகொண்டிருக்கிறார்.. பிறகு அடுத்த சில நிமிடங்களில், அந்த பெண் 10வது மாடி பால்கனியில் இருந்து தொங்குகிறார்.. இப்படி ஒருவீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தைவிட, வீடியோவுக்கு இணையவாசிகள் பதிவிட்டுள்ள கமெண்ட்கள் சோஷியல் மீடியாவின் கவனத்தை திருப்பி வருகிறது.

சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. திருமணமான நபர் ஒருவர், மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார்.. இவர்கள் இருவருமே பலமுறை நேரில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.

10th Floor Balcony Lover Wife 10


பால்கனியில் காதலர்கள்

அந்தவகையில், சம்பவத்தன்று இருவரும் சந்தித்துள்ளனர்.. கள்ளக்காதலன் வீட்டுக்கே சென்று அந்த பெண் பேசியிருக்கிறார்.. கள்ளக்காதலனின் வீடு அப்பார்ட்மென்ட் ஒன்றில் 10வது மாடியில் இருந்துள்ளது..

கள்ளக்காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த நபரின் மனைவி திடீரென்று வீட்டிற்குள் வந்துவிட்டாராம். இதனால் பதறிப்போன கணவர், தன்னுடைய கள்ளக்காதலியை வெளிப்புற பால்கனியில் ஒளிந்து கொள்ளும்படி சொன்னார்..

அப்பார்ட்மென்ட் காதலி

ஆனால், அந்த கள்ளக்காதலி மிகவும் பதட்டமாகிவிட்டார். ஒருவேளை மனைவி பால்கனிக்கு வந்துவிட்டால், மாட்டிக் கொள்வோமே என்ற பயத்தில், பால்கனியில் இருந்து தப்ப முயன்றார்..

இதற்காக பால்கனியின் மேல் பகுதியில் இருந்து, கீழே உள்ள வீட்டின் பால்கனி நோக்கி இறங்க ஆரம்பித்தார்.. எந்த பாதுகாப்பும் இல்லாமல் 10-வது மாடியில் இருந்து குழாய் பைப்பை பிடித்து இறங்கினார்.. இதை அப்பார்ட்மென்ட் மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெண்ணால் கீழே இறங்க முடியவில்லை.. இதனால் கீழே இருக்கும் வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்டுள்ளார்.. உடனே அந்த வீட்டில் இருந்த நபர், வீட்டுக்குள் பாதுகாப்பாக இழுத்து, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டார்.


10வது மாடியில் தொங்கிய பெண்

முன்னதாக, 10வது மாடியிலிருந்து பால்கனியில் கள்ளக்காதலி தொங்கி கொண்டிருப்பதை அப்பார்ட்மென்ட் வாசிகள் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்கள்.. இதைப்பார்த்த நெட்டிசன்கள், பல விதமான காமெடி கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஒரு இணையவாசி, "இந்த பெண் ஸ்பைடர்மேன் குரூப்பில் சேர்ந்து கொள்ளலாம் போலயே?" என்று கிண்டலடித்துள்ளார்..

இன்னொருவர், "இந்த அப்பார்ட்மென்ட்டில் ட்விஸ்ட் என்னன்னா, இந்த பெண்ணை காப்பாற்றிய நபரே அந்த கணவரின் மனைவியிடம் 'அவள் இங்கேதான் இருக்காள்" என்று சொல்லி இருப்பார் போல!" என்று கிண்டல் செய்துள்ளார்.


அவனை உதறி தள்ளு

எனினும் பலரும் இந்த பெண்ணின் வீடியோ பார்த்து கவலையை தெரிவித்துள்ளனர்.. "இப்படியா ஒரு ஆணுக்காக ரிஸ்க் எடுப்பது? ஒருத்தனுக்காக உயிரையே ஆபத்தில் விட வேண்டிய அவசியமில்லை... உன்னை இப்படி ஆபத்தில் விட்டுவிட்டு, தன் மனைவிக்காக வாழ்பவனை நீ உதறி தள்ளு" என்று பதிவிட்டுள்ளார்..

கமெண்ட்கள் இப்படியாக பதிவிட்டு வரும்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளையும் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. ஆபத்தான சூழ்நிலையில் ஒரு பெண் தப்பிக்க போராடும் காட்சி என்பதால், உலக மக்கள் அதிர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இதை பார்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+