ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஏன் இங்கே வந்தே? புர்கா எங்கே?.. இளம்பெண்ணை அடித்து உதைத்த நபர்.. பரபரப்பு
புர்கா அணியாத பெண்ணை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்
கவுகாத்தி: பர்தா அணியாமல் ஜீன்ஸ் போட்டு கொண்டு, செல்போன் கடைக்கு வந்துவிட்டதால், அந்த கடைக்காரர் அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவுகாத்தியில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் பிஸ்வநாத் சைராலி என்ற ஊர் உள்ளது... இந்த ஊரில் நூருல் அமீன் என்பவர் ஒரு செல்போன் கடை வைத்துள்ளார்..
அதாவது செல்போன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.. இந்த கடைக்கு ஒரு பெண், செல்போன் ஹியர்போன் வாங்க வந்துள்ளார்.. அவர் ஒரு இஸ்லாமிய பெண்.. பர்தா அணியாமல் ஜீன்ஸ் அணிந்து வந்ததாக தெரிகிறது.

ஹியர்போன்
இதை பார்த்ததும் நூருல் அமீன் டென்ஷன் ஆகிவிட்டார். அந்த பெண்ணை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி உள்ளார்.. அத்துடன், அவருடன் அங்கிருந்த 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி, கடைக்கு வெளியே தள்ளிவிட்டுள்ளனர்.. இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண், கடையில் நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய அப்பாவிடம் சொல்லி உள்ளார்... இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அப்பாவும், கடைக்கு வந்து நியாயம் கேட்டுள்ளார். ஆனால், கடை ஓனரும், மற்றவர்களும் சேர்ந்து, அவரையும் தாக்கி உள்ளனர்.

தகராறு
இதுகுறித்து பெண்ணின் அப்பா சொல்லும்போது, "என்னுடைய மகள் ஜீன்ஸ் போட்டிருந்தார் என்பதற்காகவே, அவர் கேட்ட ஹியர்போனை தர மறுத்திருக்கிறார்கள்.. தரக்குறைவாக பேசி இருக்கிறார்கள்.. கண்மூடித்தனமாக தாக்கியும் இருக்கிறார்கள்.. அஸ்ஸாமில் தலிபான் முறையை கொண்டு வர பார்க்கிறார்கள்.. பெண்கள் பர்தா அணிய வேண்டும், முகத்தை காட்டக் கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

அஸ்ஸாம்
நாங்க இதே அஸ்ஸாமில்தான் பிறந்து வளர்ந்தோம்... அஸ்ஸாம் கலாச்சாரத்தைத்தான் பின்பற்றி வருகிறோம். என் மகள் பிசிஏ படிக்கிறாள்.. அரசு பள்ளியில் தான் படித்தார்.. அஸ்ஸாமி கலாச்சாரம்தான் என் மகளுக்கு தெரியும்... ஆனால் இங்கு தலிபான் முறையை பின்பற்றி பெண்களை ஒடுக்க பார்க்கின்றனர்" என்றார் கொந்தளிப்புடன்.

ஜீன்ஸ்
பாதிக்கப்பட்ட பெண் சொல்லும்போது, "நான் அந்த கடைக்கு போயிருந்தேன். கடை ஓனர் நூருல் அமீன் வயதானவர்.. அவர் வீடும், கடையும் ஒன்றாக இருக்கிறது.. என்னை பார்த்ததும் ஏன் ஜீன்ஸ் போட்டிருக்கே? ஜீன்ஸ் அணிந்து கொண்டு இங்கெல்லாம் வரக்கூடாது என்று சொன்னார்.. "நீ என் வீட்டுக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தால், என் மருமகளும் கெட்டு போய்விடுவார்.. அவர் எப்பவுமே புர்காதான் அணிவார்" என்று சொல்லி என்னை திட்டினார்" என்றார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரின் தந்தையும் போலீசில் புகார் தெரிவிக்கவே நூருல் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications