நிறத்துக்கும், முடியழகுக்கும் பெயர் போன சூடான் மாடல் அழகி அமெரிக்காவில் மாயம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தனது கருமையான நிறத்துக்கும், முடியழகுக்கும் பெயர் போன சூடான் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி அடாவி டெங் ஹாப்கின்ஸ் நியூயார்க் நகரில் காணாமல் போயுள்ளார்.

அவரை போலீஸாரும், எப்பிஐ அதிகாரிகளும் தீவிரமாக தேடி வருகின்றனர். உலகின் முன்னணி டிசைனர்களுடன் இணைந்து பணியாற்றியவர் டெங்.

சூடானைச் சேர்ந்த இவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

பேஷன் நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில்

பேஷன் நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில்

நியூயார்க்கில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த இடத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.

ஆகஸ்ட் 6ம் தேதி கடைசியாக

ஆகஸ்ட் 6ம் தேதி கடைசியாக

கடைசியாக அவரை ஆகஸ்ட் 6ம் தேதி டைம்ஸ் ஸ்கொயர் அருகே பார்த்துள்ளனர். அதன் பிறகு அவர் காணவில்லை.

அதி உயரம்..

அதி உயரம்..

நல்ல உயரம் கொண்டவர் டெங். அதாவது ஆறு அடி ஒரு இன்ச் உயரம் கொண்டவர். 50 கிலோ எடை கொண்டவர். 22 வயதானவர்.

முடியழகு

முடியழகு

இவர் தனது கருமை நிறத் தோற்றத்தாலும், அழகான முக வசீகரத்திற்கும், முடியழகுக்கும் பெயர் போனவர்.

டெங் காணாமல் போனது அமெரிக்க பேஷன் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+