காலில் முடியுடன் விளம்பரத்தில் நடித்த பெண் மாடலுக்கு பாலியல் அச்சுறுத்தல்
BBC
ஒரு விளம்பரத்தில் கால்களில் முடியுடன் நடித்ததால் தனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததாக ஸ்வீடன் மாடல் அர்விதா பிஸ்டிரோம் கூறுகிறார்.
26 வயதான அர்விதா, அடிடாஸின் புதிய ஷூ ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் யு டியூப்பில் வெளியான பிறகு, டஜன் கணக்கிலான தவறான மேசேஜ்கள் அவருக்கு வந்துள்ளன.
சமூக வலைத்தளங்கள் மூலம் நேரடியாக தனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததாக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகச் சென்று பலரது கவனத்தை ஈர்த்தது.
"கடந்த வாரம் அடிடாஸ் விளம்பரத்தில் வந்த எனது புகைப்படத்திற்கு மோசமான எதிர்வினைகள் வந்தன" என அவர் கூறுகிறார்.
'' நான் எந்த உடல் குறையும் இல்லாத வெள்ளை பெண். காலில் முடி இருப்பது மட்டுமே ஒத்துபோகாத விஷயம்'' என்கிறார் அவர்.
மாடலான அர்விதா புகைப்பட கலைஞரும் கூட.
- பிரியங்காவை விட ஸ்மிரிதி இரானி அழகு: பாஜக தலைவரின் கருத்தால் சர்ச்சை
- அழகு சிகிச்சை மோசடி', ஹாங்காங்கில் பெண்கள் கைது
- மன அழுத்தம் கொண்ட பெண்ணுக்கு சிகை அலங்காரம் செய்தவருக்கு குவியும் பாராட்டு!
இந்த விளம்பரத்தில் "பெண் அழகியலைப் பயன்படுத்தி, பெண்ணியத்தையும் பாலின சமன்பாட்டையும் கேள்வி எழுப்புகிறார்" என அடிடாஸ் கூறியுள்ளது.
அர்விதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின் தொடர்பாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
"உங்களது உடலில் ஷேவ் செய்யவேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என பிரையன் என்பவர் கூறியுள்ளார்.
"எனது கால்களில் முடி இல்லை. கால்களில் முடி வைத்திருப்பதில் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தால் சிறந்த விஷயம். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்" என்கிறார் இனா.
படைப்பாற்றல், பன்முகத்தன்மை மற்றும் தனிச்சிறப்பான எண்ணங்கள் கொண்ட அர்விதா போன்ற படைப்பாளியுடன் பணியாற்றியதை கெளரவமாகக் கருதுகிறோம்" என ஓர் அறிக்கையில் அடிடாஸ் கூறியுள்ளது.
தனது சக கலைஞரான மோலி சோடாவுடன் இணைந்து பிக்ஸ் எனும் புத்தகத்தை அர்விதா வெளியிட்டுள்ளார்.
அதில், தனது சமூக விதிகளை மீறியதாக இன்ஸ்டாகிராமால் நீக்கப்பட்ட பெண்களின் உடலைக் காட்டும் 270 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
பிற செய்திகள்:
- விண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்!
- மனைவிக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் சௌதி ஆண்: டிவிட்டரில் சீற்றமும் வரவேற்பும்
- அறியாமையால் பாலியல் செயல்களோடு வளரும் மாணவியர்
- ஆண்களும் பெண்களும் நிகராக ஊதியம் பெற வகை செய்யும் ஐஸ்லாந்தின் புதிய சட்டம்தேசிய பூங்காவின் விலங்கு பாதுகாப்பாளரைக் கொன்ற வெள்ளைப் புலி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications