இந்தியாவுக்கு குடும்பத்தோடு வாங்க... மோடி அழைப்பு.. டிரம்ப் மகள் இவான்கா படுகுஷி!
இந்தியாவுக்கு குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய பயணம் மேற்கொள்வதில் மகள் இவான்கா மிக ஆர்வமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி முன்னிலையில் இருநாட்டு குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
பின்னர் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் இச்சந்திப்பின் போது, இந்தியாவுக்கு டிரம்ப் குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற டிரம்ப், மகள் இவான்காதான் இந்தியா செல்ல மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக கூறினார். இதையடுத்து இவான்காவை இந்தியாவில் வரவேற்பதற்கு ஆவலுடன் இருப்பதாக மோடி பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications
