ஒரே காரில் பயணித்த மோடி - ரஷ்ய அதிபர் புதின்.. உக்ரைன் போர் விவகாரம் உள்பட சந்திப்பில் பேசியது என்ன?
பிஜிங்: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடுக்கு இடையே இந்திய பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் (Modi - Putin meet) புதினும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்காக ஒரே காரில் மோடியும் புதினும் பயணம் செய்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று ஒருபக்கம் அமெரிக்கா இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், புதினும் மோடியும் எஸ்சிஓ மாநாட்டில் இந்தியா - ரஷ்யா உறவை மேலும் நெருக்கமாக காட்டியது அமெரிக்காவுக்கு கொடுத்த ஸ்ட்ராங் மெசேஜாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று சீனா சென்றடைந்தார்.

மோடி புதின் சந்திப்பு
சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இன்று சந்தித்துப் பேசினார். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒட்டுமொத்த மனிதகுலமும் விரும்புவதாக பிரதமர் மோடி புதினிடம் தெரிவித்தார்.
அமைதியைக் கொண்டுவருவதற்கான சமீபத்திய முயற்சிகளை இந்தியா வரவேற்பதாக மோடி குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "உக்ரைனில் அமைதியைக் கொண்டுவருவதற்கான சமீபத்திய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கடினமான காலங்களிலும்கூட, இந்தியாவும் ரஷ்யாவும் எப்போதும் தோளோடு தோள் நின்று முன்னேறியுள்ளன" என்றார்.
இந்தியா ரஷ்யா உறவு
கடினமான தருணங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒருமித்து நின்றதை மோடி சுட்டிக்காட்டினார். புதுதில்லிக்கும் மாஸ்கோவுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் "உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு" மிக முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான தொடர்ச்சியான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளின் சிறப்பு கூட்டாண்மையின் ஆழத்தை பிரதிபலிக்கின்றன என்றும் அவர் கூறினார். டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள 23வது உச்சி மாநாட்டிற்காக 140 கோடி இந்தியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றும் பிரதமர் மோடி இந்தச் சந்திப்பில் தெரிவித்தார்.
ஒரே காரில் சென்ற மோடி புதின்
இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய அதிபர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் செய்யவிருப்பதையும் மோடி உறுதி செய்தார். பிரதமர் மோடி கூறுகையில், " இந்தியா - ரஷ்யா இடையேயான 23-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டிசம்பர் மாதம் இந்தியா வருகை தரும் புதினை வரவேற்க நாட்டில் உள்ள 140 கோடி இந்தியர்களும் ஆர்வமாக உள்ளனர். எங்கள் இருநாடுகளுக்கு இடையேயான ஆழமான, சிறந்த மற்றும் தனித்துவமான கூட்டாண்மையை வரையறுக்கும் விதமாக இது உள்ளது" என்றார்.
உற்று கவனிக்கும் அமெரிக்கா
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கூடுதல் வரியை விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி - புதின் இடையேயான இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு பணிந்து போகாத இந்தியா, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவையே பேணுகிறோம் என்பதை எஸ்சிஓ மாநாட்டில் அமெரிக்காவிற்கு பட்டவர்த்தனமாக காட்டியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications