ரூபாய் நோட்டு அறிவிப்பு ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டிற்கு மோடி விளக்கம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படப் போவதாக முன்கூட்டியே யாரிடம் தெரிவிக்க வில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டோக்கியோ: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று முன்கூட்டியே நண்பர்களிடம் தெரிவிக்க வில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியதற்கு ஜப்பானில் விளக்கம் அளித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
கடந்த 9ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் சாதாரண பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இன்றும் கூட அவர்களுடைய பணத்தை அவர்கள் எடுக்கவே ஒரு நாள் முழுவதும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களின் வாசலுக்கு முன்னாள் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன் வழக்கம் போல் ஜப்பான் நாட்டிற்கு சென்று விட்டார் பிரதமர் மோடி. இங்கு மக்கள் படும் பாடுகள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அயல்நாட்டு பயணத்தை பிரதமர் மேற்கொண்டிருக்கிறார் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பாஜக தனது நண்பர்களுக்கு சொல்லிவிட்டதாக குற்றம்சாட்டினார். இதனால் பலர் தங்களிடம் இருந்த பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டனர் என்றும், இந்த அறிவிப்பிற்கு பின்னர் நிறைய சந்தேகங்கள் எழுவதாகவும் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் இன்று பிரதமர் மோடி ஜப்பானில் பதில் அளித்துள்ளார். அதில், "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவை நீண்ட யோசனைக்கு பிறகே எடுத்தேன். இதுகுறித்து முன்கூட்டியே யாரிடமும் நான் சொல்ல வில்லை, மக்கள் படும் சிரமங்களுக்கு தலை வணங்குகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications