மோடி- நவாஸ் ஷெரீப் நாளை சந்திப்பு: 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
உபா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு (ஸ்கோ மாநாடு) நடைபெறும் ரஷ்யாவின் உபா நகரில் ஜூலை 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறு நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு மற்றும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றுள்ளார்.

உபா நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பும் வருகை தர இருக்கிறார். ஜூலை 10ம் தேதி இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் நாட்டு வங்கிகளை இரு நாடுகளிலும் அமைப்பது. பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு விசா வழங்குவது. ஸ்ரீநகர்-முசாபர்பாத், டெல்லி-லாகூர் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு விசா வழங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.
புனித மாதமான ரம்ஜான் தொடங்கும் போது, நவாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மோடி அவருக்கு ரம்ஜான் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். அப்போது இந்திய சிறையில் வாடும் பாகிஸ்தான் மீனவர்களை விடுவிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காட்மாண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியும் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்துக்கொண்டனர். இருப்பினும் அந்த சந்திப்பின் போது இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.
இதனிடையே ரஷ்யாவின் உபா நகரில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் ஹவாஜா ஆசிப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். பாகிஸ்தானிடம் உள்ள அணு குண்டுகள் பார்வைக்கு மட்டும் வைக்கப்படவில்லை. அவற்றை எந்நேரமும் பயன்படுத்தவே வைத்திருக்கிறோம்.
தற்போது இந்தியாவுடன் போர் அபாயம் இல்லை. ஆனால் போர் அபாயம் என்பது நிரந்தரமானது தான்.எனவே, அணு குண்டுகளை பயன்படுத்தக் கூடிய வகையில் இந்தியாவுடன் போர் நீளக்கூடாது என பிரார்த்தனை செய்கிறோம். ஒருவேளை போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் ராணுவம் அணு குண்டுகளை பயன்படுத்தும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சு இந்தியாவில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications