ஈரானில் கண்ட்ரோலை எடுக்கும் மௌஜ்தபா கமேனி.. புதிய சுப்ரீம் லீடராக மறைந்த கமேனி மகன் தேர்வு
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் இப்போது போர் வெடித்துள்ள சூழலில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த மோதலில் முதல் நாளிலேயே கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரானை வழிநடத்தப் போவது யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே ஈரானின் சுப்ரீம் லீடராக மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மௌஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இப்போது உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்த ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதல் தொடங்கிய நிலையில், 5வது நாளாக இன்றும் இந்த மோதல் இன்று தொடர்கிறது.

இந்த மோதலில் முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அவர் தனது இல்லத்தில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த சூழலில், இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் கமேனி உயிரிழந்தார். முதலில் கமேனி மரணத்தை ஈரான் மறுத்தாலும் கூட பிறகு அதை ஒப்புக்கொண்டது.
ஈரான்
கமேனியின் இந்த எதிர்பாராத மரணம் ஈரானில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கொந்தளித்த ஈரான் ராணுவம், இஸ்ரேலைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வரலாறு காணாத பதற்றம் நிலவுகிறது.
புதிய தலைவர்
இதற்கு நடுவே ஈரானின் புதிய உச்ச தலைவர் யார் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உள்ள நிபுணர்களைச் சபையே புதிய உச்ச தலைவரைத் தேர்வு செய்யும். அதுவரை ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அலிர்சா அராஃபி கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். இப்போது அந்நாட்டின் வல்லுநர் சபை புதிய சுப்ரீம் லீடரை தேர்வு செய்துள்ளது.
மௌஜ்தபா கமேனி
மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மௌஜ்தபா கமேனி ஈரான் நாட்டின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரான் நாட்டின் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
யார் இவர்
56 வயதான மௌஜ்தபா, ஈரானை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அலி காமேனியின் இரண்டாவது மகன் ஆவார். நீண்டகாலமாகவே கமேனியின் வாரிசாக இவர் கருதப்பட்ட வந்த சூழலில் அவரது நியமனம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அவரது தந்தை இறந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நியமனம் நடந்துள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications