மகளுக்கு மொட்டை அடித்து கொண்டிருந்தார் அந்த அம்மா.. அப்போதுதான்.. அப்படியே உறைந்து போன மக்கள்!

மகளுக்கு மொட்டை தாய், தனக்கும் மொட்டை அடித்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

ரியோடிஜெனிரோ: கத்தியை எடுத்து மகளுக்கு மொட்டை அடித்து கொண்டிருந்தார் அவரது அம்மா.. அப்போதுதான் அந்த அதிர்ச்சி செயல் நடந்தது.. இந்த வீடியோ பார்த்து வரும் பலரும் அப்படி அப்படியே உறைந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உலகில் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன.. அவைகளில் பல வீடியோக்களாகவும் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன.. அவைகளில் சில மகிழ்ச்சியை தரும்.. சில வீடியோக்கள் பரிதாபத்தை தரும்.. சில வீடியோக்கள் கோபத்தை உண்டுபண்ணும்.. இப்போது ஒரு வீடியோ வைரலாகிறது.. இதை நெகிழ்ச்சி என்பதா? பாசத்தின் பரிமாணம் என்பதா சொல்ல தெரியவில்லை.

ரியோ டி ஜெனிரோவை சேர்ந்தவர் லூசியானா ரெபல்லோ.. இவருக்கு புற்றுநோயை இருக்கிறது.. அந்த கொடிய நோயை எதிர்த்து கடுமையாக போராடி கொண்டிருக்கிறார்.

லூசியானா

இவர் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார்.. அதில், லூசியானாவுக்கு அவரது அம்மா தலையை மொட்டை மொட்டையடித்து கொண்டிருக்கிறார்... அப்போது திடீரென லூசியானாவின் அம்மாவும், தன்னிடமிருந்த முடிவெட்டும் கருவியால், தன்னுடைய தலையையும் மொட்டையடிக்க ஆரம்பித்துவிடுகிறார்.

அம்மா

அம்மா

இதை லூசியானா கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.. அதுவரை சிரித்து கொண்டும், கண்ணடித்து கொண்டும் உட்கார்ந்திருந்தவர், தன்னுடைய அம்மாவும் மொட்டை அடித்து கொள்வதை பார்த்து அதிர்ந்து போய்விட்டார்.. இப்போது தாயும் - மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்கிறார்கள்.. 2 பேரின் கண்களும் கலங்குகின்றன.. பிறகு டக்கென லூசியானாவின் தலையில் ஒரு பாசமான முத்தத்தை அவரது அம்மா பதிக்கிறார்..

ஆச்சரியம்

ஆச்சரியம்

"யாரும் தனியாக வாழ்க்கையில் போராடுவதில்லை... ஒற்றுமையுடன் தனது முடியையும் மொட்டையடித்து தனது மகளை அந்த தாய் ஆச்சர்யப்படுத்தினார்... ஒரு தாயின் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை" என்று பதிவிடப்பட்டுள்ளது. இதுதான் அந்த வீடியோ.. இதை பார்க்கும் ட்விட்டர்வாசிகள் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள்..

பாராட்டு

பாராட்டு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அம்மாவும் மொட்டையடித்து கொள்ளும் இந்த செயல் பலரையும் நெகிழ வைத்து வருகிறது.. பலரும் மகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்தையும், அம்மாவுக்கு பாராட்டையும் பதிவிட்டு வருகின்றனர்.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அம்மாவின் பாசத்தை மிஞ்ச, வேறு ஒரு சக்தி இந்த உலகத்துக்கு கிடையவே கிடையாது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+