வேலை பர்ஸ்ட், குழந்தை நெக்ஸ்டாம்....கருமுட்டை சேமிப்பில் ஜப்பான் பெண்கள்!
டோக்கியோ: ஜப்பான் இளம்பெண்கள் தற்போது தங்களுடைய கருமுட்டைகளை சேகரித்து வைக்கத் தொடங்கிவிட்டனர்.
ஜப்பான் நாட்டில் பெண்கள் தங்களுடைய கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கு கடந்த ஆண்டு மே மாதம் சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டது.
அதைத்தொடந்து ஏராளமான பெண்கள் கரு முட்டைகளை அதற்கான மையங்களில் சேமித்து வைக்கிறார்கள்.

கன்னிப்பெண்களும் அடக்கம்:
இதில் விசேஷம் என்னவென்றால் திருமணமாகாத கன்னிப்பெண்கள் ஏராளமானோர் கரு முட்டைகளை சேமிக்கின்றனர். ஜப்பானில் பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கடினமாக விஷயமாக உள்ளது.

தாமதமான திருமணம்:
ஜப்பான் பெண்கள் பெரும்பாலானோர் அதிக வயதான பிறகே திருமணம் செய்து கொள்கிறார்கள். வேலைதான் மிக முக்கியம் என்ற நினைப்பால் திருமணம் பற்றி நினைப்பதே இல்லை.

போட்டி போட்டு சேகரிப்பு:
இதனாலும் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் போகிறது. எனவே இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கன்னிப்பெண்களும் போட்டி போட்டு கரு முட்டைகளை சேமிக்கிறார்கள்.

வருடத்திற்கு 4 லட்ச ரூபாய்:
சேமிப்பு மையங்களில் 10 கரு முட்டைகளை சேமித்து வைக்க ஜப்பான் பணத்தில் ஒரு வருடத்திற்கு 7 லட்சம் யென் கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 லட்ச ரூபாய் ஆகும்.

கருமுட்டை சேகரிப்பு:
ஆனாலும் பணம் செலவானாலும் பரவாயில்லை என பல பெண்களும் கரு முட்டைகளை சேமிக்கிறார்கள்.

வாரிசும் வேணும்:
வேலை, வேலை என்று வாரிசை இழந்துவிடக்கூடாது என்பதற்குதான் இந்த ஏற்பாடு என்கின்றனர் ஜப்பான் பெண்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications