நேபாளத்தில் 24 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு.. தொடர் பீதியில் மக்கள்!
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட 24 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்ட முறை ஆப்டர்ஷாக் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நேற்று காலை 11.56 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு பெரும் சேதம் அடைந்துள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை 1, 896 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தலைமை விஞ்ஞானியும், புவி ஆராய்ச்சியாளருமான ஆர்.கே. சத்தா கூறுகையில்,

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட 24 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்ட முறை ஆப்டர்ஷாக் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வுகள் மெதுவாக நின்றுவிடும். நில நடுக்கம் மிகவும் ஆழத்தில் ஏற்பட்டால் நில அதிர்வுகள் குறைந்த அளவில் ஏற்படும். ஆனால் நேபாளில் மேலோட்டமாக நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் நில அதிர்வுகள் ஏற்படும் என்றார்.
அடுத்த 72 மணிநேரத்திற்கு நில அதிர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இன்று பிற்பகல் 12.39 மணிக்கு நேபாளில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து பீகார், டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications