10 லட்சத்திற்கும் அதிகமானோரை தாக்கிய 'எபோலா' வைரஸ்
ஜெனிவா: இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் எபோலா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர் கொல்லியான எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் உலக சுதாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் மார்கரெட் சான் கூறுகையில்,

இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகாமானோரை எபோலா வைரஸ் தாக்கியுள்ளது. அவர்களுக்கு தினசரி தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். இம்முறை எபோலா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த அதிக முயற்சி தேவை. வைரஸ் பரவுவதை தடுக்காவிட்டால் இது மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.
கிராமப்புறங்களில் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களிலும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சுகாதாரத் துறையினர் அதிக அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 170 சுகாதாரத் துறையினர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 80க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கி பலியாகியுள்ளனர். வைரஸ் பரவத் துவங்கிய 6 மாதங்களில் அது குறித்த பயத்தில் இருந்து வெளிவருவது தான் மிகவும் கடினமாக உள்ளது என்றார்.
வைரஸ் பரவுவதை தடுக்க உலக சுகாதார அமைப்பு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு ஐ.நா. அதிகாரிகளுக்கு ஐ.நா. தலைவர் பான் கீ மூன் உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications