ஈரான் தலைவர்களை தட்டித் தூக்க.. இஸ்ரேல் மொசாட்டின் ‘ஸ்கெட்ச்’.. பற்களில் Spy சிப்? கேமரா ஹேக்கிங்?
டெல் அவிவ்: உலக அரசியலையே உலுக்கிப்போடும் ஒரு நிகழ்வாக, ஈரானின் உச்ச அதிகார மையமான அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் அணு ஆயுதக் கனவை தகர்ப்பதற்காக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், நவீன காலத்தின் மிகச்சிறந்த உளவுத்துறை வேட்டையாகக் கருதப்படுகிறது. ஆனால், உலகமே வியந்து பார்க்கும் ஒரு பாதுகாப்புக் கோட்டையை உடைத்து, காமேனியின் 'துல்லியமான இருப்பிடத்தை' இஸ்ரேலின் மொசாட் (Mossad) எப்படி கண்டுபிடித்தது? இதற்குக் பின்னால் உள்ள பல அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

அமெரிக்கா - இஸ்ரேல் அதிரடி: ட்ரம்ப் - நெதன்யாகு அறிவிப்பு
இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானை அணு ஆயுத நாடாக மாறவிடாமல் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றார். தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் காமேனியை "வரலாற்றின் மோசமான மனிதர்" என வர்ணித்த ட்ரம்ப், இந்த மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கான ஒரு வரலாற்று வெற்றி என்று முழங்கியுள்ளார்.
காமேனி எப்படி சிக்கினார்? - உலாவரும் மர்மத் தியரிகள்!
காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல 'சதித் திட்டத் தியரிகள்' (Conspiracy Theories) காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. இதில் சில முற்றிலும் கற்பனையாகத் தோன்றினாலும், சிலவற்றிற்கு இப்போது ஆதாரங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
1. 'டூத் ஃபேரி' (Tooth Fairy) ஆபரேஷன்?
சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் தியரி இதுதான். வைரலாகும் ஒரு தகவலின்படி, மொசாட் ஏஜெண்டுகள் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் போல வேடமிட்டு ஈரானுக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் காமேனியின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களுக்கு பல் சிகிச்சை அளிக்கும்போது, ரகசியமாக 'டிராக்கிங் சிப்களை' (Tracking Chips) அவர்களது பற்களுக்குள் பொருத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களது இருப்பிடத்தை இஸ்ரேலிய செயற்கைக்கோள்கள் துல்லியமாகக் கண்காணித்திருக்கலாம் என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
- உண்மை நிலை: இது ஒரு திரில்லர் சினிமா போல இருந்தாலும், இதற்கு இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. நம்பிக்கைக்குரி மருத்துவர்களை தவிர்த்து பிறரிடம் பற்களை காட்டுவது சந்தேகம் என்பதால் இது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.
2. நெருங்கிய வட்டத்தில் இருந்த துரோகி? - இஸ்மாயில் காணி மீது சந்தேகம்!
மற்றொரு பரபரப்பான தியரி என்னவென்றால், ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) குத்ஸ் படைத் தளபதி இஸ்மாயில் காணி (Esmail Qaani) தான் மொசாட்டிற்கு உளவு பார்த்தவர் என்பது. ரெடிட் (Reddit) போன்ற தளங்களில் பரவும் தகவலின்படி, காமேனி தங்கியிருந்த இடத்திலிருந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் காணி வெளியேறியுள்ளார். அவர் தற்போது ஈரான் அரசால் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் விசாரிக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.
- உண்மை நிலை: இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத ஒரு ஊகம் மட்டுமே. ஆனால் காணி மாயமாகியுள்ளது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள்: தொழில்நுட்பத்தால் வீழ்த்தப்பட்ட ஈரான்!
சில தகவல்கள் கற்பனையாக இருந்தாலும், மொசாட் மற்றும் சிஐஏ (CIA) பயன்படுத்திய சில உத்திகள் தற்போது சர்வதேச ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
டிராபிக் கேமராக்களின் 'ஹேக்கிங்' (Traffic Camera Hacking):
பிரிட்டனின் 'பைனான்சியல் டைம்ஸ்' (Financial Times) வெளியிட்ட செய்தியின்படி, இஸ்ரேல் கடந்த பல ஆண்டுகளாக ஈரானின் போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களை (Traffic Cameras) ஹேக் செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. காமேனி பயணிக்கும் வாகனங்கள், அவரது பாதுகாப்புப் படையினர் எங்கு வாகனங்களை நிறுத்துகிறார்கள், தேஹ்ரானின் பாஸ்சர் வீதியில் உள்ள அவரது ரகசிய வளாகத்தின் தினசரி நடவடிக்கைகள் என்ன என்பதை இஸ்ரேல் ஒரு பெரிய திரையில் நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்தத் துல்லியமான கண்காணிப்புதான் தாக்குதலுக்குத் தேவையான சரியான நேரத்தைத் தீர்மானித்தது.
'பதேஸ்பா' (Badesaba) ஆப் ஹேக்கிங்:
ஈரானில் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் 'பதேஸ்பா' என்ற மத வழிபாட்டு மற்றும் பிரார்த்தனை நேரத்தை அறிவிக்கும் செயலி இஸ்ரேலால் ஹேக் செய்யப்பட்டது. ராய்ட்டர்ஸ் (Reuters) செய்திகளின்படி, அந்தச் செயலியைப் பயன்படுத்திய மக்களுக்கு, "கணக்கு தீர்க்கும் நேரம் வந்துவிட்டது" என்ற எச்சரிக்கை செய்திகளும், ராணுவம் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் அனுப்பப்பட்டன. இது ஈரானிய பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் ஒரு உளவியல் ரீதியான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆதரவாளர்களின் பிம்பம் vs எதிரிகளின் வியூகம்
காமேனியின் ஆதரவாளர்கள் அவர் ஒரு வீரரைப் போல மரணத்தை எதிர்கொண்டதாகக் கூறுகின்றனர். அவருக்கு ஆபத்து குறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்தும், அவர் பதுங்கு குழியில் (Bunker) ஒளிய மறுத்துவிட்டார் என்று அவர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். ஆனால், உண்மையில் இஸ்ரேலின் நவீனத் தொழில்நுட்பமும், உளவுத்துறையின் ஊடுருவலும் அவரைத் தப்பிக்க விடவில்லை என்பதே நிதர்சனம்.
காமேனியின் மரணம் ஈரானுக்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு மட்டுமல்ல, அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. பற்களில் சிப் பொருத்தப்பட்டதா அல்லது ரகசிய கேமராக்கள் மூலம் வேட்டையாடப்பட்டாரா என்ற விவாதங்களுக்கு மத்தியிலும், ஒன்று மட்டும் தெளிவாகிறது: நவீன உலகின் உளவுப்போர் வெறும் ஆயுதங்களால் மட்டும் நடப்பதில்லை, அது டேட்டா மற்றும் ஹேக்கிங் மூலமும் நடக்கிறது.
ஈரானின் அடுத்தகட்ட நகர்வு என்ன? இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications