மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து டிவிட் பண்ற சுகமே தனி.. வடிவேலு பாணியில் பேசிய டிரம்ப்!
வீட்டில் படுத்துக் கொண்டு டிவிட் செய்ய பிடிக்கும் என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டு இருக்கிறார்.
நியூயார்க்: அமெரிக்க அதிபர்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விஷயத்திற்கு பிரபலம் ஆனார்கள். மக்களின் அந்தரங்கத்தில் தலையிட்டதாக ஜார்ஜ் புஷ் விமர்சிக்கப்ட்டார்.
ஒசாமா கதையை முடித்ததற்காக ஒபாமா பேசப்பட்டார். ஆனால் டொனால்ட் டிரம்ப் அவரது டிவிட்களுக்காக பேசப்படுவார் என்று யாருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.
அவரது டிவிட்கள் அனைத்தும் அத்தனை பிரபலம். எல்லாமே எதாவது ஒரு அதிர்ச்சி செய்திகளுடன் மக்களை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக டிவிட்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய கொள்கைகளை டிவிட்டர் மூலம் வெளிப்படுத்துவதாக கருத்து நிலவி வருகிறது. முக்கியமாக பாகிஸ்தானிற்கு எதிராகவும், வடகொரியாவிற்கு எதிராக இவர் வெளியுறவுக் கொள்கைகளை கூட டிவிட்டரில்தான் வெளியிட்டார். இது அமெரிக்காவில் அடிக்கடி விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டிவிட் செய்ய பிடிக்கும்
தற்போது இதுகுறித்து டிரம்ப் பேசி இருக்கிறார். அதில் ''எனக்கு டிவிட் செய்ய பிடிக்கும். எனக்கு எதிராக வரும் கருத்துக்களுக்கு அப்படித்தான் என்னால் பதில் சொல்ல முடிகிறது. என் தரப்பு நியாயங்களை இதில் எளிதாக சொல்ல முடிகிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறது.

படுக்கையில்
மேலும் ''எனக்கு வீட்டில் படுத்துக் கொண்டு இரவில் டிவிட் செய்ய பிடிக்கும் . பெரும்பாலும் இதற்கு நான் உதவியாளர்களை வைத்துக் கொள்வது இல்லை. அவசர நேரத்தில் மட்டுமே உதவியாளரை டிவிட் செய்ய சொல்வேன். சாப்பிடும் போது கூட டிவிட் செய்வேன்'' என்றுள்ளார்.

என்ன சாப்பாடு
இவருடைய உணவு பழக்க வழக்கம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அதுகுறித்து பேசிய இவர் ''நான் எப்போதும் சாத்தான நல்ல உணவுகளை மட்டும் சாப்பிடுகிறேன். சமயங்களில் நாக்கிற்கு ருசியான உணவுகளை கூட சாப்பிடுவேன். எனக்கு சாப்பிட பிடிக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications