ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் முதலீடு செய்ய நுழைவு வாயிலாக திகழும் மொசாம்பிக்... : மோடி புகழாரம்
மபுடோ: ஆப்பிரிக்கா கண்டத்தில் இந்தியர்கள் முதலீடு செய்ய நுழைவு வாயிலாக மொசாம்பிக் நாடு திகழ்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மொசாம்பிக் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் யூசியுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது இருதரப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவும் மொசாம்பிக்கும் காலனி ஆதிக்க நாடாக இருந்த காலகட்டங்களில் சந்தித்த துயரங்களே இரு நாடுகளையும் கை கோர்க்க வைத்தது.
காலனி ஆதிக்கத்தில் இருந்த மொசாம்பிக்கின் விடுதலைக்கு இந்தியா பெரும் ஆதரவை அளித்தது. தற்போது ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் முதலீடு செய்ய மொசாம்பிக் நுழைவு வாயிலாக திகழ்கிறது.
இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
Mozambique has already been one of the gateways for Indian investments into Africa: PM @narendramodi at the joint press meet
— PMO India (@PMOIndia) July 7, 2016
பயங்கரவாதம் உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை இருவரும் ஒப்புக்கொண்டோம். ஆகையால் இருநாடுகளிடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பருப்பு தேவையை மொசாம்பிக் நிவர்த்தி செய்யும் என நம்பிக்கை உள்ளது. மொசாம்பிக்கும் பொருளாதார வளர்ச்சியடைய இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications