ஜி-7 மாநாடு..இத்தாலி சென்ற மோடி! முதல் நாளில் நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்து.. எகிறி அடித்த எம்பிக்கள்!
ரோம்: உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இத்தாலியில் இன்று ஜி 7 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர். இந்த நிலையில் மசோதா ஒன்றின் விவாதத்தின் போது இத்தாலி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 290க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதை அடுத்து பாஜக சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி உள்ளிட்ட 71 மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து தனது அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி பதவி ஏற்று கொண்டார்.
பிரதமர் மோடி: இந்த நிலையில் ஏற்கனவே ஜூன் 14ஆம் தேதி இத்தாலையில் ஜி 7 மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பிரதமராக பதவி ஏற்ற மோடி தனது மூன்றாம் ஆட்சிக்காலத்தில் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இத்தாலி செல்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜி 7 உச்சி மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. ஜி7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகள் பங்கேற்கின்றன.
ஜி 7 மாநாடு: மேலும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை இத்தாலியின் பிரின்டிசி விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரான், கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Today MP waved Italy’s flag in parliament and was brutally assaulted by Salvini’s party MP ( PM Meloni’s coalition partner) who has close ties to neo-Nazi-fascist groups.
— Rula Jebreal (@rulajebreal) June 12, 2024
Mussolini’s heirs are once again deploying violence in the halls of democracy. 🇮🇹 🇮🇹pic.twitter.com/SpaOtg0EAM
நாடாளுமன்றத்தில் தாக்குதல்: இவ்வாறாக இத்தாலியில் உலக தலைவர்கள் குவிந்திருக்கும் நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஒருவர் ஒருவர் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இத்தாலி நாடாளுமன்றத்தில் அங்கிருக்கும் சிறு மாகாணங்களுக்கு அதிக அளவில் சுயாட்சி அதிகாரம் அளிக்கும் மசோதாவை தற்போது ஆளும் வலதுசாரி அமைப்பு கொண்டு வந்தது.
கடும் மோதல்: இந்த மசோதாவை எதிர்க்கட்சியான பைவ் ஸ்டார் இயக்கம் மிகக் கடுமையாக எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில் பைவ் ஸ்டார் இயக்கத்தின் எம்பி ஒருவர் மாகாண விவகாரங்கள் துறை அமைச்சரான ராபர்டோ மீது இத்தாலி கொடியை வீசினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆளுங்கட்சி எம்பிக்கள் குறிப்பிட்ட அந்த எம்பியை பிடித்து இழுத்து தாக்கினர்.
வெளியான வீடியோ: இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த எம்பிக்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்துக் கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் ஒரு எம்பி கடுமையாக காயம் அடைந்த நிலையில் அவர் வீல் சேரில் வைத்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். தன்னை ஆளுங்கட்சி எம்பிக்கள் மிகக் கடுமையாக தாக்கியதாகவும் தன்னை மார்பில் உதைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications