25வது பிறந்த நாள்... பக்கிங்காம் அரண்மனையை காரில் வலம் வந்து கொண்டாடிய "மிஸ்டர் பீன்"
லண்டன்: மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தை யாரும் மறந்து விட முடியாது. இந்த கதாபாத்திரம் பிறந்து 25 வருடங்களாகி விட்டது. இதையடுத்து இந்த கதாபாத்திரமாக நடித்து, அதுவாகவே மக்கள் மனதில் பதிந்து போய் விட்ட நடிகர் ரோவன் அட்கின்சன், மிஸ்டர் பீன் காட்சி ஒன்றை நிஜமாகவே பக்கிங்காம் அரண்மனை முன்பு நடத்திக் காட்டி மக்களை மகிழ்வித்தார்.
இங்கிலாந்து நடிகரான ரோவன் அட்கின்சனுக்கு வயது 60 ஆகி விட்டது. ஆனால் அவரது மிஸ்டர் பீன் கதாபாத்திரத்திற்கு வயது 25 ஆகிறது. உலகம் முழுவதும் மக்கள் மனதில், குறிப்பாக சிறார்கள் மனதில் நிலை கொண்டிருக்கும் ஒரு முக்கியப் பாத்திரம்தான் இந்த மிஸ்டர் பீன்.
இந்த கதாபாத்திரத்தின் சில்வர் ஜூப்ளி வருடத்தையொட்டி பக்கிங்காம் அரண்மனை முன்பு அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டினார் ரோவன் அட்கின்சன்.

மினி கார்...
தனது மிஸ்டர் பீன் வீடியோக்களில் வலம் வரும் தனது ராசியான மினி காரில் ஏறி லண்டன் நகரை வலம் வந்தார் ரோவன். மிஸ்டர் பீன் காட்சிகளில் வருவதைப் போலவே இதையும் அவர் வடிவமைத்து மக்களைக் குஷிப்படுத்தினார்.

நகர்வலம்...
பக்கிங்காம் அரண்மனையை சுற்றி வந்த ரோவன், செயின்ட் ஜேம்ஸ் பார்க், லண்டன் நகரின் பிற பகுதிகள் என பல பகுதிகளிக்கும் அவர் வலம் வந்து மக்களை ஆச்சரிய்படுத்தினார்.
|
டெட்டி பொம்மை...
கூடவே அவரது டெட்டி பொம்மையும் இந்த பயணத்தில் இடம் பெற்றிருந்தது. அதைப் பிடித்து அவ்வப்போது ஆட்டியபடி, தனது முட்டை விழியால் முழித்தபடி, புர் சிரிப்புடன் அசத்தினார் ரோவன்.

கார் முழுக்க பொருட்கள்...
1994ம் ஆண்டு வந்த மிஸ்டர் பீன் காட்சி ஒன்றில் ஏகப்பட்ட பொருட்களை வாங்கி கார் முழுக்க நிரப்பி தான் உட்கார இடம் இல்லாமல் பொருட்கள் மீது அமர்ந்து, பெரிய மாப்பு ஒன்றை வைத்து ஸ்டியரிங்கையும், கிளட்ச், கியர், பிரேக் போன்றவற்றையும் இயக்கி அசத்தியிருப்பார் ரோவன். அதே காட்சியைத்தான் லண்டன் வலத்தின்போது அரங்கேற்றியிருந்தார் ரோவன்.

25 வருடங்கள்...
ரோவன் நடித்த மிஸ்டர் பீன் முதல் காட்சி வெளியாகி 25 வருடங்களாகி விட்டதைத் தொடர்ந்து இந்த நகர் வலத்தை நடத்தினார் ரோவன்.

அனிமேஷனும் உண்டு...
மொத்தம் 15 காட்சிகளாக மிஸ்டர் பீன் படம் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் இன்று வரை மக்களை மகிழ்வித்து வருகிறது. மேலும் இதை அனிமேஷனாவுகம் உருவாக்கியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications