9ம் தேதி இஸ்லாமிய மத முறைப்படி முகம்மது அலியின் உடல் அடக்கம்
லூயிஸ்வில்லி, அமெரிக்கா: மறைந்த குத்துச் சண்டை ஜாமப்வான் முகம்மது அலியின் உடல் நல்லடக்கம் இஸ்லாமிய மத முறைப்படி ஜூன் 9ம் தேதி அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லியில் நடைபெறவுள்ளது.
பல்வேறு பிரபலங்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதுகுறித்து முகம்மது அலி குடும்பத்தினரின் செய்தித் தொடர்பாளர் பாப் கன்னல் கூறுகையில், ஜூன் 9ம் தேதி லூயிஸ்வில்லி, ப்ரீடம் ஹாலில் முகம்மது அலியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும். முற்றிலும் இஸ்லாமிய முறைப்படி இது நடைபெறும்.

அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். இறுதிச் சடங்குகள் நடைபெறும் அரங்கில் 18,000 பேர் இடம் பெற முடியும். மேலும் அலிக்கு மிகவும் நெருக்கமான இடம் இது என்பதாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு என்றார் அவர்.
1960ம் ஆண்டு இந்த இடத்தில்தான் அலி தனது முதல் குத்துச் சண்டைப் போட்டியில் மோதி வெற்றி பெற்றார். மேலும் 60களில்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இந்த இடத்தை அதிகம் நேசித்தவர் அலி என்பதால் இந்த இடத்திலேயே அவரது இறுதிச் சடங்கும் நடைபெறவுள்ளது.
முகம்மது அலியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் துருக்கி அதிபர், ஜோர்டான் மன்னர் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் இதில் பங்கேற்கிறார்.
அலியின் இறுதிச் சடங்குகளை கலிபோர்னியா மாகாண இமாம் ஜையத் ஜாக்கிர் தலைமை தாங்கி நடத்தவுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications