குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மது அலி மருத்துவமனையில் அனுமதி - நிமோனியாவில் பாதிப்பு!
லூயிஸ்வில்லி, கென்டகி, அமெரிக்கா: பிரபல குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மது அலி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் தேறி வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அலி எந்த மருத்துவமனையில்அனுமதிக்கப்ட்டுள்ளார் என்பது தெரிவிக்கப்படவில்லை. அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதைக அவரது உதவியாளர் பாப் கன்னல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுரித்து கன்னல் விடுத்துள்ள அறிக்கையில், பர்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிரார் அலி. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நலம் திருப்திகரமாக உள்ளது எனஅறு கூறியுள்ளார்.
72 வயதாகும் அலி, சீக்கிரமே வீடு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேஸியஸ் கிளே என்ற இயற் பெயர் கொண்ட அலி பின்னர் இஸ்லாமுக்கு மாறி முகம்மது அலி என்ற பெயருக்கு மாறினார். தனது 18வது வயதில் ஒலிம்பிக்கில், லைட் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார். 1064ம் ஆண்டு அப்போதைய பிரபல சாம்பியன் சோனி லிஸ்டனை வீ்ழ்த்தி முதல் முறையாக உலக ஹெவிவெயிட் சாம்பியனாக பட்டம் வென்றார்.
வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்ததை பகிரங்கமாக கண்டித்தவர் அலி என்பது நினைவிருக்கலாம். மேலும் இவர் இஸ்லாமியராக மாறியதால் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டார்.
3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் அலி. ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என்றும் முழக்கமிட்டவர். 1981ம் ஆண்டு குத்துச் சண்டை போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் முகம்மது அலி. 1984ம் ஆண்டு அவருக்கு பர்க்கின்சன் நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அது முதல் அவர் போராடி வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications