இந்த பதவியே வேண்டாம்.. ராஜினாமா செய்து ஓடும் முகமது யூனுஸ்? வங்கதேச ராணுவ தளபதியுடன் மோதல்! பின்னணி
டாக்கா: வங்கதேசம் நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்ய முகமது யூனுஸ் முடிவு செய்துள்ளார். வங்கதேசத்தில் அவருக்கு எதிராக நடக்கும் போராட்டம் மற்றும் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானின் நடவடிக்கை தான் முக்கிய காரணமாகும். அப்படி என்ன நடக்கிறது இந்த வங்கதேசத்தில்.. வாங்க பார்க்கலாம்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அங்கு இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

புரியும்படி கூற வேண்டும் என்றால் முகமது யூனுஸ் தலைமையில் தான் வங்கதேசத்தில் தற்போது நிர்வாகம் நடந்து வருகிறது. இவர் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். இதனால் நமக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு என்பது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாகிவிட்டது. இதற்கு சீனா, துருக்கி, பாகிஸ்தானுடன் சேர்ந்து முகமது யூனுஸ் நம் நாட்டுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் தான் முக்கிய காரணமாகும்.
ராஜினாமா செய்வதாக...
சரி இது இருக்கட்டும். இப்போது முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு ஓட முடிவு செய்துள்ளார். இதனை தேசிய குடிமக்கள் கட்சியின் ( Bangladesh Nationalist Party ) தலைவர் நித் இஸ்லாம் உறுதி செய்துள்ளார். இவர் யார் என்றால் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சியை சேர்ந்தவர்.
இதுபற்றி நித் இஸ்லாம், ‛‛யூனுஸ் ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதனால் அது குறித்து ஆலோசிக்க அவரை சந்தித்தோம். அவரிடம் கேட்டால் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக கூறுகிறார். நிலைமை மோசமாக இருப்பதாக அவர் உணர்கிறார். நாடு தற்போதிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகளிடையே பொதுவான சிந்தனையை கொண்டு வர முடியவில்லை. அதனை கொண்டு வர முடியாது என்று நினைக்கிறார். இதனால் ராஜினாமா செய்ய நினைக்கிறார்'' என்று கூறினார்.
பின்னணியில் 2 காரணங்கள்
முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்வதாக கூறியதன் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று அவருக்கு எதிராக அந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள். இன்னொன்று அந்த நாட்டின் ராணுவ தளபதியாக இருக்கும் வாக்கர் உஸ் ஜமான். அதாவது ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு சில மாதங்கள் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைக்க வேண்டும்.
அதன்பிறகு நாட்டின் நிலைமையை சரிசெய்து 3 அல்லது 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் அந்த நாட்டின் அரசியல் கட்சியினர் மற்றும் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் முடிவாக இருந்தது.இதனால் தான் முகமது யூனுஸை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்க அவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.
பிரச்சனை தீர்க்காத முகமது யூனுஸ்
ஆனால் கடந்த மாதம் ஆகஸ்ட்டில் தலைமை ஆலோசகர் பதவிக்கு வந்த முகமது யூனுஸால் நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. நாட்டில் இன்னும் கொந்தளிப்பான சூழல் தான் உள்ளது. இதனால் இன்னும் கூட தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டு மத்தியில் தான் தேர்தலை நடத்தப்படும் என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த 20ம் தேதி வங்கதேசத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி முகமது யூனுஸ் ஆலோசனை மேற்கொண்டார். இதில் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், கடற்படை தலைமை தளபதி அட்மிரல் முகமது நஸ்முல் ஹசன், விமானப்படையின் தலைமை தளபதி ஏர் மார்ஷனல் ஹசன் முகமது கான் உள்பட முக்கிய ஆலோசகர்கள் பங்கேற்றனர்.
கறாராக சொன்ன ராணுவ தளபதி
இந்த மீட்டிங்கின்போது ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், ‛‛இடைக்கால அரசு அமைந்து 18 மாதம் முடிவதற்குள் நாட்டில் தேர்தலை நடத்த வேண்டும். அப்போது தான் ராணுவம் தங்களின் நிலைகளுக்கு திரும்ப முடியும். இதனால் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் மூலமாக புதிய அரசை கொண்டு வர வேண்டும். இதற்கு தேர்தல் பணிகளை இப்போது இருந்தே விரைவுப்படுத்த வேண்டும்'' என்று கூறினார். ஆனால் முகமது யூனுஸ் 2026 மத்தியில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளார்.
வாக்குரிமைக்கான வயதை 17 ஆக குறைக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்னும் கூட நாட்டில் தேர்தலை தள்ளிப்போட காரணமாக இருக்கும். இதன்மூலம் தொடர்ந்து வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் பொறுப்பில் நீடிக்க முகமது யூனுஸ் திட்டமிட்டுள்ளார். அதோடு தேர்தலை 2026ம் ஆண்டு மத்தியில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது முகமது யூனும் மீது அரசியல் கட்சியினர் மற்றும் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ஆகியோருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பதவியில் இருக்கும் முகமது யூனுஸ் நாட்டில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் நம் நாட்டுடன் மோதுவதையும், பரம எதிரியான பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவதிலும் தான் கவனம் செலுத்தி வருகிறார். இது அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
மியான்மர் காரிடார் பிரச்சனை
அதேபோல் தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கிருந்து ரோஹிங்கியா அகதிகள் ஏராளமானவர்கள் வங்கதேசத்தில் குடிபெயர்ந்துள்ளனர். இது வங்கதேசத்துக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இப்படியான சூழலில் முகமது யூனுஸ் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் நகரில் இருந்து மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்கு காரிடார் அமைக்க திட்டமிட்டுள்ளார். இது சக்சஸ் ஆகும் பட்சத்தில் மியான்மர் நாட்டில் இருந்து அதிகமானவர்கள் வங்கதேசத்துக்குள் நுழைவார்கள்.
இது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். அதுமட்டுமின்றி தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நடுவே இதில் முதலீடு செய்வதை அரசியல் கட்சியினர் மற்றும் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் விரும்பவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் தான் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications