வங்கதேச ஜனாதிபதியாகும் முகமது யூனுஸ்? வெளியான முக்கிய தகவல்.. இந்துக்களுக்கு மீண்டும் சிக்கல்?
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் முகமது யூனுஸ் அந்த பொறுப்பில் இருந்து விலக உள்ளார். இந்நிலையில் தான் முகமது யூனுஸ் வங்கதேச ஜனாதிபதி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் செயல்பட்டு வந்தார். 2024 ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் அந்த பொறுப்பில் அவர் செயல்பட்டு வருகிறார்.
பிஎன்பி கட்சி வெற்றி
தற்போது வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியை கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வழிநடத்தினார். விரைவில் தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராக உள்ளார்.
முகமது யூனுஸின் திட்டம் என்ன?
இவர் பிரதமராகும்போது இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் முகமது யூனுஸின் அதிகாரம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இன்னும் சில நாட்கள் மட்டுமே முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருப்பார். இந்நிலையில் தான் முகமது யூனுஸின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது.
ஜனாதிபதி பதவி மீது கண்
இதற்கிடையே தான் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முகமது யூனுஸ் வங்கதேசத்தின் ஜனாதிபதி பதவி மீது கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முகமது யூனுஸ் சிட்டகாங்கில் பிறந்தவர். தற்போது அவருக்கு 85 வயது ஆகிறது. சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றினார்.
பின்னணி என்ன?
புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் இடைக்கால அரசாங்கத்தின் பணி முடிவடையும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் அதிகாரத்தை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் ஒப்படைத்த பிறகு, நாங்கள் எங்கள் தொழில்களுக்குத் திரும்புவோம் என்றார். ஆனால் தற்போது புதிய அரசின் ஜனாதிபதி பதவி மீது அவர் கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வங்கதேசம் கடந்த 2 ஆண்டுகளில் மோசமான நிலைமையை எதிர்கொண்டது.
ஆனால் முகமது யூனுஸ் திறமையாக செயல்பட்டு நாட்டை வழிநடத்தியதாக அங்குள்ள அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கு பரிசாக அவருக்கு வங்கதேச ஜனாதிபதி பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்துக்களுக்கு எதிரானதாக மாறலாம்
அதேவேளையில் இது அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்த சமயத்தில் ஏராளமான இந்துக்கள் அடித்து கொல்லப்பட்டனர்.
தீவைத்து எரிக்கப்பட்டனர். அதனை தடுக்க முகமது யூனுஸ் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இப்படியான சூழலில் அவர் வங்கதேச ஜனாதிபதியானால் அது இந்துக்களுக்கு எதிரானதாக அமைய வாய்ப்புள்ளது.
யார் இந்த முகமது யூனுஸ்?
2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். 2024ல் வங்கதேசத்தில் நடந்த வன்முறையை தொடர்நது பிரான்ஸில் இருந்து வந்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரானார். இந்த தேர்தலில் முகமது யூனுஸ் போட்டியிடவில்லை. தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்பது தான் எனது இலக்கு. எனக்கு அரசியல் ஆசை இல்லை என்று முகமது யூனுஸ் கூறியிருந்தார். ஆனால் தற்போது ஜனாதிபதி பதவி மீது கண்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications