வங்கதேசத்துக்கு விரையும் எலான் மஸ்க்? திடீரென கடிதம் எழுதிய முகமது யூனுஸ்.. மேட்டர் இதுதான்
டாக்கா: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இணைய வசதியை வங்கதேசத்துக்கு வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக வங்கதேசத்துக்கு வரும்படி திடீரென்று அந்த நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் முக்கிய கடிதம் எழுதியுள்ளார்.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த நாடு பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. தற்போது அங்கு இடைக்கால அரசு நடந்த வருகிறது.

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். அவரது தலைமையிலான ஆலோசகர்கள் நம் நாட்டை அவ்வப்போது சீண்டும் வகையில் கருத்துகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க்குடன் சமீபத்தில் வீடியோ கால் மூலம் முகமது யூனுஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். டெஸ்டா நிறுவனத்தின் சிஇஓ, எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளராக உள்ள எலான் மஸ்க்குடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை அதிக கவனம் பெற்றது.
ஸ்டார்லிங் செயற்கைகோள் இணையதள வசதி வழங்கும் நிறுவனத்தை எலான் மஸ்க் நடத்தி வருகிறார். அதன் மூலம் வங்கதேசத்துக்கு இணையதள வசதி வழங்கும்படி முகமத யூனுஸ் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக இன்று முகமது யூனுஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எலான் மஸ்க்குடன் மீட்டிங் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது. இருதரப்பும் சேர்ந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் வங்கதேசத்தில் ஸ்டார்லிங் இணையதள சேவை செயல்பாட்டு வருவோம் என்று நம்புகிறோம்'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் வங்கதேசத்துக்கு அழைப்பு விடுத்து அந்த நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், எலான் மஸ்க்கிற்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்டார்லிங்கின் இணையதள சேவையை வழங்குவதற்கான சாத்திய கூறுகளை ஆராய வங்கதேசத்துக்கு வருகை தர வேண்டும். உங்களின் சேவை என்பது இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் வங்கதேசம் வந்து இளைஞர்களை சந்திப்பதன் மூலம் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும். நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்கான பரஸ்பர உறவை பின்பற்ற இது உதவும்'' என்று கூறியுள்ளார்.
இதனால் வங்கதேசத்துக்கு எலான் மஸ்க் விசிட் செய்கிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்து ஸ்டார்லிங் இணையதள சேவையை எலான் மஸ்க் வங்கதேசத்துக்கு வழங்கும் பட்சத்தில் அது அந்த நாட்டுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். அவரது நிறுவனத்தின் இணையதள சேவை என்பது சேட்டிலைட் மூலம் வழங்கப்படும் என்பதால் அனைத்து இடங்களிலும் அந்த வசதியை பயன்படுத்த முடியும். இதனால் வங்கதேசத்துக்கு எலான் மஸ்க்கால் அதிர்ஷ்டம் அடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இணையதள சேவை நம் நாட்டில் பயன்பாட்டில் இல்லை. மாறாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் , நெதர்லாந்து, டென்மார்க், போர்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. வங்கதேசத்துக்கும் இந்த வசதி கிடைக்கும் பட்சத்தில் ஸ்டார்லிங் இணையதள சேவையை பெற்ற நாடுகளின் பட்டியலில் இணையும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications