பசை மூலம் 6 வயது மகனின் ஆணுறுப்புக் காயத்தை சரி செய்ய முயன்ற தாய்
ஹூஸ்டன்: 6 வயது மகணின் ஆணுறுப்பில் கோபத்தில் அடித்து விட்டார் அவரது தாயார். இதனால் வெட்டுக் காயம் ஏற்பட்டு விட்டது. இதைப் பார்த்து பயந்து போன தாயார், அந்தக் காயத்தை குணமடையச் செய்வதற்காக பசையைத் தடவியுள்ளார். இதனால் அந்த சிறுவனின் நிலை கவலைக்கிடமானது. போலீஸார் அப்பெண்ணை தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்று இரவு பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ராணுவ வீரர் ஒருவர் தனது மகன் வலியால் துடிப்பதையும், அவனது உள்ளாடை ரத்தத்தால் கறையாகி இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் ஆணுறுப்பில் காயம் இருப்பதையும், மேலும் அதில் ஒரு வித பசை தடவப் பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் சிறுவனின் உயிருக்கே ஆபத்து என எடுத்துக் கூறியுள்ளனர் மருத்துவர்கள்.
இவ்வளவு பெரிய ஆபத்தான காயம் சிறுவனுக்கு ஏற்பட்டது எப்படி என விசாரித்ததில், அதில் அவனது தாயாருக்கு தொடர்பிருப்பது அம்பலமானது. உடனடியாக இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.
34 வயதான வர்காஸ் என்ற அச்சிறுவனது தாயார் கைது செய்யப் பட்டார். அவரிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், கோபத்தில் சிறுவனின் டிராயரைப் பிடித்து இழுத்து வேகமாக கீழே தள்ளியுள்ளார் வர்காஸ். அப்போது ஆணுறுப்பில் காயம் ஏற்பட்டு விட்டது. கிட்டத்தட்ட பிய்ந்து போவது போல வந்து விட்டது. இதைப் பார்த்து பயந்து போன வர்காஸ், காயத்தைச் சரி செய்ய ஒட்டும் பசையை தடவியதை ஒப்புக் கொண்டார். மேலும், பசையைத் தடவுவதற்கு முன்னதாக ஆல்கஹால் கொண்டு காயத்தைக் கழுவியுள்ளார் அப்பெண்.
தற்போது சிரையில் அடைக்கப் பட்டுள்ள அப்பெண்மணிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம் எனத் தெரிகிறது.
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட சிறுவன் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications