வாழ, வேலை பார்க்க உலகின் சிறந்த 15 நகரங்கள் பட்டியலில் மும்பை.. மெட்ராஸ் எங்கப்பா?
பாரிஸ்: வாழ, வேலை பார்க்க உலகின் சிறந்த நகரங்களில் மும்பையும் ஒன்று என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
உலகின் முன்னணி பிசினிஸ் ஸ்கூல்களில் ஒன்றான பிரான்சில் உள்ள இன்சீட் கல்வி நிறுவனம் மக்கள் வாழ, வேலை பார்க்க எந்தெந்த உலக நகரங்கள் சிறந்தவை என்று ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.
கணக்கெடுப்பின் முடிவின் அடிப்படையில் வாழ, வேலை பார்க்க சிறந்த 15 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

துபாய்
வாழ, வேலை பார்க்க மிகவும் சிறந்த நகரங்கள் பட்டியலில் துபாய் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த கணக்கெடுப்பு பட்டியலில் லண்டன் 10வது இடத்திலும், பாரிஸ் 11வது இடத்திலும் உள்ளது.

மும்பை
மும்பைக்கு இன்சீட் பட்டியலில் 13வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் மும்பை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்டர்டாம்
துபாயை அடுத்து ஆம்ஸ்டர்டாம், டொரண்டோ, சிங்கப்பூர், மேட்ரிட், ஹாங்காங், நியூயார்க், டோக்கியோ, ஷாங்காய், லண்டன், பாரிஸ், மிலனோ, மும்பை, மாஸ்கோ, சா பாலோ ஆகிய நகரங்ள் வாழ, வேலை பார்க்க சிறந்த நகரங்கள் ஆகும்.

இன்சீட்
இன்சீட் கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு பல்வேறு நாடுகளில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் 835 பேர் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர். பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications