தாய்லாந்து ரிசார்ட்டில் நிர்வாணமாக கிடந்த இங்கிலாந்து இளம் ஜோடியின் உடல்கள்
பாங்காக்: தாய்லாந்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஜோடியின் உடல்கள் நிர்வாண கோலத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயதுள்ள ஆணும், பெண்ணும் கடந்த மாதம் 25ம் தேதி ஜோடியாக தாய்லாந்துக்கு வந்துள்ளனர். அவர்கள் தாய்லாந்தில் உள்ள கோ தாவ் என்ற தீவில் உள்ள ரிசார்ட்டில் பங்களா எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை அவர்களின் உடல்கள் நிர்வாண நிலையில் கடலுக்கு அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் முகத்தில் 3 இடங்களிலும், ஆணின் பின்புறத்தில் 4 இடங்களிலும் காயம் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து ரிசார்ட் ஊழியர் ஒருவர் கூறுகையில்,
அந்த ஜோடியின் உடல்கள் பாறைகளுக்கு பின்னால் கிடந்தன. இந்த தீவில் இப்படி நடந்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். நான் இது போன்று இதுவரை பார்த்தது இல்லை என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாய்லாந்தின் கிராபி பகுதியில் 51 வயது அமெரிக்கர் ஒருவர் பாரில் ஏற்பட்ட தகராறில் குத்திக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 59 வயது ஆஸ்திரேலிய பெண் புகெட்டில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications