தேசதுரோக குற்றச்சாட்டு: இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் முஷரப் பதில் வழக்கு
இஸ்லாமாபாத்: தன் மீதான தேசதுரோக குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரும் , ராணுவ தலைமை தளபதியுமான பர்வேஸ் முஷரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, தேசதுரோக வழக்கு உள்பட 5 வழக்குகள் உள்ளன. தற்போது அவர் பாகிஸ்தானில் உள்ள தனது பண்ணை வீட்டில் வீட்டுக் காவலில் இருக்கிறார். தேசதுரோக வழக்கு தவிற மற்ற நான்கு வழக்குகளிலும் முஷரப்புக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. தேசதுரோக குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் முஷரப், வருகிற 24-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்திற்கு எதிராக முஷரப் சார்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து முஷரப்பின் வழக்கறிஞர் முகமது அலி சைப் கூறுகையில், ‘முஷரப் ராணுவ தளபதியாக இருந்தவர். பாகிஸ்தான் ராணுவ சட்டம் 1952-ன் படி இவர் மீது விசாரணை நடத்த சிறப்பு கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. நெருக்கடிநிலை பிரகடம் செய்தது ராணுவம் எடுத்த கூட்டு முடிவு. அதில் தனிப்பட்ட ஒருவரின் பொறுப்பு ஆகாது. ஆகவே இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications