ஆஸ்திரேலியாவில் "கலாபூஷணம்" யாழ். ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஷ்ணன் காலமானார்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இசை ஆளுமையான யாழ்ப்பாண மிருதங்க கலைஞர் ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஷ்ணன் இன்று காலமானார்.

இலங்கை யாழ்ப்பாணத்தின் மூளாய் கிராமத்தில் பிறந்தவர் ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஷ்ணன். அவரது தந்தை ஆ.வி. ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுல முறைப்படி கல்வி கற்றார்.

Musician Kalabhooshanam Santhana Krishnan passes away in Australia

இசைமேதைகள் வலங்கைமான் ஏ.சண்முகசுந்தரம்பிள்ளை, ஏ.பாலகிருஷ்ணன் ஆகியோர் இவரது சகோதரர்கள். தொலைத் தொடர்புத்துறையில் என்ஜினியராகவும் பணியாற்றினார்.

எஸ்.கணபதிப்பிள்ளை, பொன் சுந்தரலிங்கம், எம்.ஏ. குலசீலநாதன், சென்னை பல்கலைக்கழக பேராசிரியை பிரமீளா குருமூர்த்தி, குலபூஷணி கல்யாணராமன், சிவசக்தி (லண்டன்), சத்தியபாமா இராஜலிங்கம் ஆகியோரின் இசை அரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்தவர் சந்தானகிருஷ்ணன்.

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் பல வளரும் கலைஞர்களின் அரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார்.

இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஓமன், ஹாங்ஹாங், ஆஸ்திரேலியா நாடுகளில் சந்தானகிருஷ்ணன் கச்சேரிகள் செய்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி மற்றும் சென்னை வானொலி நிலையத்திலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இரண்டு வாத்தியங்களிலும் கச்சேரி செய்தவர்.

இவருக்கு நல்லை ஆதீனமும், மதுரை ஆதீனமும் இணைந்து ‘மிருதங்க பூபதி', கொழும்பு கப்பித்தாவத்தை தேவஸ்தானம் ‘ஞானச்சுடரொளி', இலங்கை அரசாங்கம் ‘கலாபூஷணம்' ஆகிய பட்டங்களையும், பொற்கிழி, தங்கப் பதக்கங்கள், பொன்னாடை வழங்கியும் சிறப்பித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சிட்னி கலாபவனம் ‘கலா திலகம்' என்னும் விருதையும், சிட்னி கம்பன் கழகம் ‘சான்றோர் விருது' வழங்கியும் சிறப்பித்திருக்கிறது.

Musician Kalabhooshanam Santhana Krishnan passes away in Australia

சென்னை இசை விழாக்களில் மியூசிக் அகாடமி, அண்ணாமலை மன்றம், ரசிக ரஞ்சன சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சபா, கிருஷ்ணகான சபா, வாணிமஹால் மற்றும் பல சபாக்களிலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இரு வாத்தியங்களும் வாசித்துள்ளார்.

இந்தியாவின் மிருதங்க வித்துவான்களான டி.கே.மூர்த்தி, பாலக்காட்டு ரகு, உமையாள்புரம் சிவராமன், வேலூர் ராமபத்ரன், அமரர் தஞ்சை உபேந்திரன், குருவாயூர் துரை, ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருச்சி சங்கரன், திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் இளைய தலைமுறை வித்துவான்களுடனும் இணைந்து கஞ்சிரா வாசித்தவர்.

இசை ஆளுமை கொண்ட சந்தானகிருஷ்ணன் மறைவு இசை உலகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.

அவரின் இறுதி நிகழ்வுகளின் விபரம்:

Viewing: On Date 15th Feb 2016 (Monday)

Time between 06:00 PM to 08:00 PM

At Guardian Funerals, 1 First Avenue, Blacktown, NSW 2148, Australia.

Last ride and Cremation: On Date 17th Feb 2016 (Wednesday)

Time between 02:00 PM to 04:00 PM

At Pinegrove Memorial Park, "North Chapel",

Eucalyptus Drive (OFF Kington Street), Minchinbury, NSW 2770, Australia.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+