டிரம்ப் பேச்சை மதிக்காத மஸ்க்.. கல்லா கட்டுவதுதான் முக்கியமாம்! இப்போதைக்கு போர் நிற்காது போல!
கீவ்: ரஷ்யாவுக்கு எதிரான சண்டையில் உக்ரைனுக்கு எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள்கள் கைகொடுத்து வருகின்றன. போர் கூடாது என்று டிரம்ப் அறிவுறுத்தியிருந்ததால் 'ஸ்டார்லிங்க்' சேவை உக்ரைனிலிருந்து திரும்ப பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிரம்ப் சொன்னா கேட்கனுமா? என்கிற ரீதியில், சேவையை தொடர மஸ்க் அனுமதி வழங்கியுள்ளார்.
இதன் மூலம் உக்ரைன்-ரஷ்யா போரை அமெரிக்கா தொடர விரும்புகிறதோ? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

நேற்று x தளத்தில் போலந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஸ்டார்லிங்க் தொடர்பான பிரச்சனையை எழுப்பியிருந்தார். "உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவையை கொடுக்க நாங்க வருஷத்துக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்கிறோம். வாங்கும் காசுக்கு தரமான சர்வீஸ் இல்லையெனில், வேறு கம்பெனியை பார்த்துக்கொள்வோம்" என்று கூறியிருந்தார்.
அவ்வளவுதான் எலான் மஸ்க்குக்கு கோவம் வந்துவிட்டது. "சின்ன பையா.. சும்மா இரு! நீ கொடுக்குற காசு ரொம்ப கம்மி. இந்த காசுக்கு ஸ்டார்லிங்க் தவிர வேறு எவனும் இன்டர்நெட் கனெக்ஷனை கொடுக்கமாட்டான்" என்று காட்டாமாக பதிலளித்திருக்கிறார்.
இவர்கள் இருவரின் சண்டை முக்கியமான விஷயம்தான். ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் உக்ரைனுக்கு இணைய சேவை தொடரும் என்பதுதான். கடந்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருந்தார் டிரம்ப். அங்கு வைத்து, 'ரஷ்யா கூட சண்டைக்கு போகக்கூடாது' என்று ஜெலன்ஸ்கிக்கு வேப்பிலை அடித்திருந்தார்.
மட்டுமல்லாது ஜெலன்ஸ்கியோடு நாங்க அன்னம் தண்ணீ பழக மாட்டோம் என்கிற ரீதியில், உக்ரைனுக்கான ராணுவ உதவி மற்றும் உளவு தகவல்களை பகிர்ந்துக்கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்திருந்தார். இந்த சம்பவத்தை பார்த்த மகா ஜனங்கள், அப்பாடி இனி போர் நடக்காது, அமைதி திரும்பிவிடும் என்று நினைத்திருந்தனர். ஆனால் அங்குதான் டிவிஸ்ட்.. டிரம்ப் வார்த்தையை மதிக்காமல் உக்ரைனுக்கு இணையதள சேவையை மஸ்க் நீடித்திருக்கிறார்.
போர் காரணமாக உக்ரைனில் 20% பகுதியில் செல்போன் டவர்கள் அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றன. இந்த பகுதியில் சிக்னல் கிடைக்காது. எனவே ஸ்டார்லிங்க் மூலம்தான் இணைய வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரேயொரு ஆன்டனாவை மட்டும் எடுத்து வானத்தை நோக்கி நீட்டினால் போதும், அதுவழியாக உங்களுக்கு இணைய சேவை கிடைத்துவிடும். எனவே உக்ரைன் ராணுவம் இந்த சேவையை பயன்படுத்திதான் ரஷ்யாவுடன் மல்லுக்கட்டி வருகிறது.
இப்போ டிரம்ப் விஷயத்துக்கு வருவோம். அவருதான் போர் கூடாது என்று சொல்லிவிட்டாரே, அப்புறம் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் இணைய சேவையை போர் நடக்கும் பகுதியிலிருந்து வாபஸ் வாங்கியிருக்க வேண்டும்தானே? அதை அவர் செய்யவில்லை. இதுதான் தற்போது விவாதமாக மாறியிருக்கிறது.
எலான் மஸ்க்தான் அமெரிக்காவின் நிஜ அதிபர் என்றும், இவர் பேச்சை கேட்டு ஆடும் பொம்மைதான் டிரம்ப் என்றும் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது, டிரம்பின் பேச்சை மதிக்காமல் மஸ்க் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுவது சலசலப்பை கிளப்பியுள்ளது. மட்டுமல்லாது மஸ்க்கின் அறிவிப்பால் உக்ரைன்-ரஷ்யா போர் மெலும் தொடரும் என்றும் சொல்லப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications