ஒரு வாட்ச் செய்வது பெருங்குற்றமா?: அமெரிக்காவில் முஸ்லீம் மாணவன் கைது
இர்விங்: அமெரிக்காவில் கடிகாரம் ஒன்றை செய்த குற்றத்திற்காக 14 வயது பள்ளி மாணவன் அகமது முகமது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள இர்விங் நகரில் இருக்கும் மெக்ஆர்தர் உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் அகமது முகமது(14). சூடானில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய முகமது எல் ஹஸன் முகமுதுவின் மகன்.

அகமதுவுக்கு டிவி, கம்ப்யூட்டர், செல்போன்களை ரிப்பேர் செய்வது பிடிக்கும். இந்நிலையில் அவர் தானே சொந்தமாக ஒரு கடிகாரத்தை செய்தார். கடிகாரத்தை செய்த குஷியில் அவர் அதை தனது ஆசிரியர்களிடம் காண்பிக்க நினைத்து அதை பள்ளிக்கு எடுத்துச் சென்றார்.
பள்ளியில் தனது ஆசிரியையிடம் அகமது தான் செய்த கடிகாரத்தை ஆசை ஆசையாக காண்பித்தார். அந்த ஆசிரியையோ அகமதுவின் முயற்சியை பாராட்டாமல் அவர் செய்திருப்பது வெடிகுண்டு என்று நினைத்துவிட்டார். உடனே இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து சிறுவனின் கைகளில் விலங்கு மாட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் செய்தது வெறும் கடிகாரம் தான் என்பதை அறிந்து அவரை விடுவித்தனர். இதற்கிடையே இந்த செய்தி அறிந்த பலர் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் அகமதுவுக்கு ஆதரவாகவும், போலீசாரை கண்டித்தும் கருத்து தெரிவித்தனர்.
அகமதை எப்படி கைது செய்யலாம் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அகமது ஒரு முஸ்லீம் என்பதால் அவரின் திறமையை பாராட்டாமல் அவரை கைது செய்து அசிங்கப்படுத்தியதாக பலரும் கோபம் அடைந்துள்ளனர்.
அகமதுவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் வேறு செய்துள்ளது. ஒரு குற்றமும் செய்யாத தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க அகமது விரும்பவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications