Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒற்றுமை முக்கியம்.. முஸ்லீம்களுக்கு ''பேஸ்புக்'' மார்க் ஜக்கர்பர்க் ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக முஸ்லீம்களுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

Muslims always welcome on Facebook: Mark Zuckerberg

பாரீஸ் தீவிரவாத தாக்குதல் மற்றும் அமெரிக்காவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்தில் நடந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லீம்கள் என்பதால் இஸ்லாமிய சமூகத்தினர் பாகுபாட்டை சந்தித்து வருகின்றனர். முஸ்லீம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

நம் சமூகம் மற்றும் உலகில் உள்ள முஸ்லீம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க விரும்புகிறேன். பாரீஸ் தாக்குதல் மற்றும் இந்த வாரம் நடந்த வெறுப்பு சம்பவம் ஆகியவற்றால் பிறர் செய்த தவறுகளுக்கு தங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று முஸ்லீம்கள் பயத்தில் இருப்பதை என்னால் நினைத்து பார்க்க முடிகிறது.

அனைத்து சமூகத்தினருக்கும் எதிரான தாக்குதல்களை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும் என யூதர்களாகிய என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். இன்று உங்களுக்கு எதிராக எந்த தாக்குதலும் இல்லாவிட்டாலும், சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அனைவரையும் காயப்படுத்தும்.

I want to add my voice in support of Muslims in our community and around the world.After the Paris attacks and hate...

Posted by Mark Zuckerberg onWednesday, 9 December 2015

நீங்கள் இந்த சமூகத்தில் ஒரு முஸ்லீமா, நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம், உங்களின் உரிமைக்காக போராடி, உங்களுக்கு அமைதியான, பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்று ஃபேஸ்புக் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு குழந்தை பிறந்துள்ளது எங்களுக்கு நிறைய நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனால் சிலரின் வெறுப்பால் வெறுப்பு மனப்பான்மைக்கு பலரும் ஆளாகிவிடக்கூடும். நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, பிறரிடம் இருக்கும் நல்லவற்றையே பார்த்தால் நாம் சிறந்த உலகை உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+