சவுதியில் தென்பட்டது பிறை.. நாளை முதல் ரமலான் நோன்பு ஆரம்பம்.. தமிழ்நாட்டில் எப்போது?
சவுதி: சவூதி அரேபியாவில் இன்று பிறை தென்பட்ட நிலையில் நாளை (மார்ச் 11) முதல் அங்கு ரமலான் நோன்பு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிட்ட பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் வழக்கம்.

ரமலான் நோன்பு காலத்தில் உணவு உண்ணாமல், நீர் பருகாமல் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள், மாலையில் நோன்பு கஞ்சி சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள். மேலும் இப்தார் விருந்து உண்பதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறை பார்த்தே நோன்பு கடைப்பிடித்தலை இஸ்லாமியர்கள் தொடங்குவார்கள்.
சவூதி அரேபியாவில் இன்று (மார்ச் 10) ரமலான் பிறை பார்க்கும் நிகழ்வு நடந்தது. அதன்படி சவூதி அரேபியாவில் இன்று பிறை தென்பட்டுள்ளது. இதனால் நாளை (மார்ச் 11 - திங்கடிழமை) முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் நாளை (மார்ச் 11) ரமலான் மாதத்தின் முதல் நாள் என்றும் சவுதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. ரமலான் நோன்பின் முதல் நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சவுதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால், குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை முதல் ரமலான் நோன்பு ஆரம்பம் ஆகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, பொதுவாக சவூதி அரேபியாவுக்கு மறுநாள் ரமலான் நோன்பு தொடங்கும். எனவே வரும் செவ்வாய்க்கிழமை இங்கு ரமலான் தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் பிறை பார்த்தே ரமலான் நோன்பு அறிவிப்பு வெளியாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications