என்னுடைய பேஸ்புக் விவரமும் திருடப்பட்டுவிட்டது.. ஃபீல் பண்ணும் மார்க் ஜூக்கர்பெர்க்
பேஸ்புக்கின் மூலம் தன்னுடைய தகவல்களும் திருடப்பட்டு இருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்க நீதிமன்றத்தில் பேசி இருக்கிறார்.
நியூயார்க்: பேஸ்புக்கின் மூலம் தன்னுடைய தகவல்களும் திருடப்பட்டு இருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்க நீதிமன்றத்தில் பேசி இருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் விசாரணை
பேஸ்புக் தகவல் திருட்டு குறித்து அதன் நிறுவனர் மார்க் மீது நிறைய வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது குறித்து இரண்டு நாட்கள் முன்பு நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அவரை விசாரித்த டிக் டுர்பின் பேஸ்புக் திருட்டு குறித்து கோபமாக பல கேள்விகளை கேட்டார். இதற்கு மிகவும் சோகமாக அவர் பதிலளித்தார்.

கேள்வி பதில்கள்
நீதிமன்றத்தில் மார்க்கிடம் 20 நிமிடம் ''எஸ் ஆர் நோ'' என்ற முறையில் கேள்விகள் கேட்கப்பட்டது. கேட்கப்படும் கேள்விகள் எதற்கும் விளக்கம் கொடுக்க கூடாது, எஸ் இல்லை நோ என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். பேஸ்புக்கில் எந்த மாதிரியான முறைகேடுகள் நடந்தது என்பது குறித்து இந்த பகுதியில் கேள்விகள் கேட்கப்பட்டது. மார்க் அதிகம் சொதப்பியது இந்த பகுதியில்தான்.

பேஸ்புக் விட்டு சென்றார்கள்
நிறைய பேர் பேஸ்புக் பிரச்னைக்கு பின் பேஸ்புக்கை விட்டு சென்று இருக்கிறார்களா? என்று மார்க்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மார்க் எஸ் என்று பதில் அளித்தார். இதுவரை வெளிவந்த தகவல்களின் படி 100 பேருக்கு 3 பேஸ்புக் பயனாளர்கள் பேஸ்புக்கைவிட்டு வெளியேறி உள்ளனர். இதில் பிரபலங்கள் அதிகம்.

மார்க் தகவல்
வழங்கறிஞர் மார்க்கிடம் 'உங்களுடைய தகவல்கள் திருடப்பட்டதா?'' என்று கேள்வி கேட்டனர். அதற்கு மார்க் எஸ் என்று பதிலளித்தார். ஆனால் அவருடைய தகவல்கள் எப்படி திருடப்பட்டது என்று விளக்கம் கொடுக்கப்படவில்லை. அவர் பொய் சொல்கிறார் என்று மார்க்கிற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications