இடுப்பு இப்படிப் பெருத்துருச்சே.. கிம் கர்தஷியானின் கவலை!
லாஸ் ஏஞ்சலெஸ்: தனது எடை தாறுமாறாக கூடி விட்டதாகவும், இடுப்பும், பின்புறமும் பெரிதாகி விட்டதாகவும் கவலை தெரிவித்துள்ள கிம் கர்தஷியான், அதைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சியைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
இப்படிக் கூறியதற்கு முதல் நாள்தான் தனது முன்னழகு தெரியும் வகையில் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து ஜிம்மி கிம்மலின் சாட் ஷோவுக்கு வந்து போயிருந்தார் கிம்.
வந்த இடத்தில் யாராவது அவரிடம் உடம்பைப் பாருங்க என்று கூறியிருப்பார்களோ என்னவோ இப்போது உடல் எடையைக் குறைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் கிம்.

டிவிட்டரில் புலம்பல்
இதுகுறித்து டிவிட்டரிலும் கூட புலம்பியுள்ளார் கிம். ஒரு டிவிட்டில், என்னைப் போலவே குழந்தை பெற்ற எல்லோருக்குமே இப்படித்தான் உடம்பு பெருத்து விடுமா.. தெரியவில்லை. எது எப்படியோ உடல் எடை கூறி விட்டது உண்மை. அதைக் குறைத்தாக வேண்டும். எனவே குறைக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

இப்படிப் பெரிதாகி விட்டதே
இன்னொரு டிவிட்டில் எனது இடுப்பும், பின்புறமும் ரொம்பப் பெருத்து விட்டது. இதைக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு வயதுக் குழந்தைக்கு அம்மா
கிம் தனது காதலர் கென்யே வெஸ்ட் மூலம் கடந்த ஆண்டுதான் ஒரு குழந்தைக்குத் தாயானார். தற்போது அக்குழந்தைக்கு ஒரு வயதாகப் போகிறது.

பேபி வெயிட்டெல்லாம் கிடையாது
இன்னொரு டிவிட்டில், பேபி வெயிட் என்று இதைக் கூற மாட்டேன். அதெல்லாம் சும்மா சாக்கு. உடம்பு கூடிப் போச்சு. அதுதான் உண்மை. குறைக்க வேண்டியதுதான் என்று கூறியுள்ளார்.

டயட் ரொம்பக் கஷ்டமப்பா....
அதேபோல அவர் போட்டுள்ள இன்னொரு டிவிட்டில் டயட்டில் இருக்கிறேன். அது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. நல்லபடியாக இது போக வாழ்த்துங்கள் என்று கோரியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications