மியான்மர் ராணுவ ஆட்சி பேயாட்டம்- பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக குண்டு வீச்சு-100 பேர் பலி; ஐநா ஷாக்
நைபியிடவ்: மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியை எதிர்த்ததாக சொந்த நாட்டு பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகளை வான்வழியே வீசி கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இச்சம்பவத்துக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் நாட்டில் ராணுவ கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பொதுமக்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அடக்குமுறைக்கு எதிராக மியான்மரின் பல பகுதிகளில் பல்வேறு ஆயுதம் தாங்கிய குழுக்கள், ராணுவத்துடன் யுத்தம் நடத்தி வருகின்றன.

மியான்மரின் வடமேற்கு சாகெய்ங் பிராந்தியத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆயுத குழுக்கள் உக்கிர யுத்தம் நடத்தி வருகின்றன. இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை மியான்மர் ராணுவம் நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது இந்த பிராந்தியம்.

இதன் உச்சமாக சாகெய்ங் பகுதியில் சில கிராமங்களை மட்டும் இலக்கு வைத்து விமான மூலம் சரமாரியாக, கொத்து குண்டுகளை வீசியது. இந்த கொத்து குண்டுகளுக்கு இரையான பொதுமக்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
மியான்மர் ராணுவத்தின் இக்கொடூர தாக்குதலில் சுமார் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கிராமங்களில் தெருவெங்கும் பொதுமக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. பா ஸி கிய் என்ற ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் 60 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications