மியான்மரில் பதற்றம் - ஓராண்டுக்கு அவசர நிலை அறிவித்த ராணுவம்
மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் காவலில் வைத்துள்ள நிலையில் அவசரநிலையை அந்நாட்டு ராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது.
நைபிடா: மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ஆங்சாங் சூகி உள்ளிட்ட தலைவர்கள் காவலில் வைத்துள்ள நிலையில் மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
மியான்மரில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சியின் காரணமாக ஆங் சான் சூகி உள்பட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மியான்மரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மியான்மர் நாட்டின் ராணுவ புரட்சி குறித்து இந்தியா உள்பட அண்டை நாடுகள் ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.
இநத தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராணுவம் குற்றம் சாட்டியது. இந்தநிலையில் ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஆங் சான் சூகி கூறுகையில், நான் எங்கள் மக்களிடம் கடுமையாக பதிலளிக்க வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில் மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
தலைநகர் நைபிடா, முக்கிய நகரமான யங்கூனில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் இணைய தளங்கள், தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications