ராணுவப் புரட்சிக்கு மத்தியில்.. சற்றும் அஞ்சாமல்.. மியான்மர் பார்லிமென்ட் முன் டான்ஸ் ஆடிய பெண்!
நைபிடா: பெண் ஒருவர் மியான்மர் பார்லிமென்ட் கட்டிடம் முன் ஏரோபிக்ஸ் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மியான்மரில் நடைபெற்ற 2-வது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், ராணுவம் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டியது. இந்த சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்தது. மேலும் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

மீண்டும் ராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள சமயத்தில், கிங் ஹின் வாய் என்ற பெண் அந்நாட்டு பார்லிமென்ட் கட்டிடம் முன் நடனம் ஆடி, அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அப்பெண்ணின் பின்புறம் ராணுவ வாகனங்கள் பார்லிமென்ட் நோக்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருந்தும் அப்பெண் எவ்வித பதற்றமும் இன்றி நடனம் ஆடி உள்ளார்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது, பிட்னஸ் போட்டி ஒன்றிற்காக இந்த வீடியோவை எடுத்தேன். நான் காலை செய்திகளை பார்க்கவில்லை. பிறகு தான் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ள தகவல் தெரியும் என்றார். மியான்மர் கல்வி அமைச்சக ஊழியரான இவர், இதே இடத்தில் நடனமாடி பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
ஆனால் ராணவ வாகனங்கள் பின்னணியில் வர, இப்பெண் ஆடிய ஏரோபிக்ஸ் நடனம் ஆடியதால் தான் இந்த வீடியோ இந்த அளவிற்கு பிரபலமாகி உள்ளது. இதனை அப்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால் ட்விட்டர் வாடிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட இந்த வீடியோ மிகவும் பிரபலமாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications