பூமிக்கு வரும் மர்ம சிக்னல்.. ஏலியன்கள் அழைக்கிறதா? கண்டுபிடிக்க முடியாமல் திணறும் விஞ்ஞானிகள்
கான்பெர்ரா: விண்வெளியிலிருந்து ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கு ஒரு முறை வித்தியாசமான சிக்னல் பூமிக்கு வருகிறது என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இது எங்கிருந்து வருகிறது? சிக்னல் மூலம் யாராவது நம்மை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்களா? ஏலியன்கள்தான் இந்த சிக்னலை அனுப்புகிறதா? என்கிற கேள்விகளுக்கு விடை தெரியாமல் விஞ்ஞானிகள் குழம்பிப்போயுள்ளனர்.
அண்டத்தில் உள்ள ஏதோ ஒரு பொருளிலிருந்துதான் இந்த சிக்னல் வருகிறது என்பதை கண்டுபிடித்துள்ள அவர்கள், அது எந்த பொருள்? என தெரியாமல் திணறி வருகின்றனர். இந்த மர்ம பொருளுக்கு அவர்கள் ASKAP J1832-0911 என பெரியிட்டிருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய ஸ்கொயர் கிலோமீட்டர் அரே பாத்ஃபைண்டர் (ASKAP) மற்றும் நாசாவின் சக்திவாய்ந்த சந்திரா எக்ஸ்ரே தொலைநோக்கியை பயன்படுத்தி இந்த மர்ம சிக்னலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 44 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் இந்த சிக்னல், சுமார் 2 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.
விண்வெளியிலிருந்து எக்ஸ்ரே மற்றும் ரேடியோ கதிர்கள் வெளியாவது அதிசயம் ஒன்றுமில்லை. அவ்வப்போது தொலைதூர நட்சத்திரங்களிலிருந்து இதுபோன்ற கதிர்கள் வெளியாகும். ஆனால் 1-2 விநாடிகள் மட்டுமே இது ரிசிவ் ஆகும். அப்புறம் எப்போது வரும் என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் விஞ்ஞானிகள் தற்போது ரிசிவ் செய்திருக்கும் சிக்னல் சீரானதாக இருக்கிறது. இதை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியும். எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதையும் சொல்ல முடியும்.
அப்படியெனில் இந்த சிக்னலை அனுப்பும் பொருள் எது? நிச்சயமாக நட்சத்திரங்கள் கிடையாது. நாம் இதுவரை புரிந்துக்கொள்ளாத ஒரு விஷயத்தை போல இது இருக்கிறது.
இருப்பினும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். சில கருத்துக்களையும் அவர்கள் முன்வைத்திருக்கின்றனர். உதாரணமாக, இறந்து போன நட்சத்திரத்திலிருந்து காந்த எச்சம் வெளியேறும். அதுவாகக்கூட இது இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இப்போது வரை இதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை.
விண்வெளியில் நமக்கு தெரிந்ததெல்லாம், கோள்கள், குறுங்கோள்கள், விண்கற்கல், வால் நட்சத்திரகள், நட்சத்திரங்கள், கருந்துளைகள்தான். இதைத்தாண்டி புதியதாக எதுவும் கிடையாது. அப்படிப்பார்த்தால், நமக்கு தெரியாத இன்னும் ஏதோ ஒரு பொதுவான பொருள் விண்வெளியில் இருக்கிறது. அது நீண்ட காலத்திற்கு அழிவில்லாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு கருந்துளை அழிய பல கோடி, கோடி, கோடி ஆண்டுகள் ஆகும்.
அதைவிட நீண்ட ஆயுளை கொண்ட ஏதோ ஒன்று விண்வெளியில் இருக்கிறது. அதுதான் தொடர்ந்து சிக்னலை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. பூமிக்கு சிக்னல் அனுப்புகிறது என்பதைவிட, அதன் சிக்னல் கடந்து செல்லும் பாதையில் நாம் இருக்கிறோம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அப்படியெனில் அது என்ன? இதுதான் மண்டையை பிளக்கும் கேள்வியாக இருக்கிறது.
இதற்கான விடை இன்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் ஏதோ ஒருநாள் அது என்னவென கண்டுபிடிக்கப்பட்டே தீரும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications