பசிபிக் கடலில் தெரிந்த கருப்பான உருவம்.. அதுவும் 20000 அடி ஆழத்தில்.. கிட்ட போனால்? ஜப்பான் அதிசயம்
டோக்கியோ: நம்முடைய உலகில் எங்காவது ஒரு அதிசயமும், ஆச்சரியமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதேபோல, ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் உலக மக்களை நாளுக்கு நாள் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன... எனினும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.. இதுபோன்ற அதிசயங்களை, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து தந்தவண்ணம் உள்ளனர்.. அந்தவகையில், ஜப்பான் விஞ்ஞானிகள் தங்களது தற்போதைய கண்டுபிடிப்பு பற்றி சொல்வது என்ன தெரியுமா?
ஜப்பானிலுள்ள டோக்கியோ மற்றும் ஹொக்கைடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் 6,200 மீட்டர் ஆழத்தில் கருப்பு நிற மர்ம முட்டைகள் கண்டுபிடித்துள்ளனர்.. ரிமோட் வாகனம் மூலம் இந்த முட்டைகளை கவனித்திருக்கிறார்கள்..

கருப்பு முட்டைகள்
கடலுக்கு அடியில் 20,000 அடி ஆழத்தில். இந்த கருப்பு நிற முட்டைகள் குவியலாக இருந்துள்ளன.. கடலுக்குள் எப்படி இவ்வளவு முட்டைகள் என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டார்கள்..
அதேபோல, முட்டைக்குள் என்ன இருக்கிறது? என்ற ஆர்வமும் அதிகமாக கிளம்பியது. அது ஏதாவதொரு கடல் உயிரினங்களின் முட்டைகளாகவே இருக்கும் என்று நினைத்து, அவைகளை கொண்டுவந்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
பசிபிக் கடலில் ஆழமான பகுதியாக உள்ளது "அபிசோபெலஜிக் மண்டலம்" ஆகும்.. எனவே அந்த முட்டைகளை அவ்வளவு ஆழத்திலிருந்து கடலுக்கு வெளியே கொண்டுவருவது மிகவும் சவாலாக இருந்துள்ளது.. எனினும் முட்டைகளை மேலே கொண்டு வந்தபோது, பெரும்பாலான முட்டைகள் உடைந்துவிட்டதாம்.. அவ்வளவு முட்டை குவியல்களில் வெறும் 4 முட்டைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
முட்டையை உடைத்தால்?
உடனே முதுகெலும்பில்லாத உயிரினங்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு முட்டைகள் அனுப்பப்பட்டன.. 4 முட்டைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.. ஆனால், அப்போதுதான் தெரிந்தது, அது முட்டையே கிடையாதாம்.. தட்டையான புழுக்களின் கூடு என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினார்கள்..இப்படியொரு புழு கூடுகளைப் பார்த்ததே கிடையாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்..
முட்டையை வெட்டியதுமே அப்போது, அதிலிருந்து பால் போன்ற வெள்ளை திரவம் வெளியேறியிருக்கிறது.. அதற்குள்ளே சின்ன சின்ன வெள்ளை உடல்கள் அடர்த்தியாக இருந்தன.. அப்போதுதான், அது புழுக்கள் கொண்ட கூடு அதாவது பிளாட்டிஹெல்மின்த்ஸ் என்பது உறுதியானது. இந்த முதுகெலும்பில்லாத உயிரினங்கள் கடலின் மிக ஆழம் வரை வாழக்கூடியதாம்..
கருப்பா பயங்கரம்
பார்ப்பதற்கே கருப்பாக, பயங்கரமாக இருந்துள்ளன.. இவ்வளவு ஆழத்தில் தட்டையான புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..
இதற்கு முன்பு 5,200 மீட்டர் ஆழத்தில் தட்டையான புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன என்றாலும்., ஆழமான கடலிலும், தட்டையான புழுக்கள் போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறதாம்.
தட்டை புழுக்கள்
Biology Letters என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையின் இணை எழுத்தாளர் இதுகுறித்து சொல்லும்போது, "நான் இதுவரை இப்படியொரு பிளாட்வார்ம் (flatworm) எங்கியுமே பார்த்ததில்லை இது என்னுடைய ஆய்வுப் பயணத்தில் ஒரு புதிய, அபூர்வமான கண்டுபிடிப்பு, மற்றும் மறக்க முடியாதது" என்றும் தெரிவித்துள்ளார்.
தட்டையான புழுக்கள் ஆழமற்ற நீரில் வாழும் உயிரினங்களிலிருந்து அதிக வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆராய்ச்சியாளர்களுக்கே பீதியை கிளப்பிய இந்த கருப்பு முட்டைகள் அதாவது தட்டை புழுக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications